ஊழல் வழக்குகளில் இருந்து பாதுகாக்க கை கோர்த்த ரணில்- ராஜபக்சேக்கள்- விரட்டியடிக்கும் இலங்கை மக்கள்!
கொழும்பு: இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வரும் மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளால் பிரதமர், ஜனாதிபதி பதவிகள் கேள்விக்குரியதாகிவிட்டன. ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும், இடைக்கால பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவும் விலகியாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்கிற இரு துருவ அரசியல்தான் கோலோச்சி வந்தது. மெல்ல மெல்ல இது உருமாறி ரணில் vs ராஜபக்சேக்கள் எனவும் உருமாற்றம் அடைந்தது. வெளித்தோற்றத்தில் இருவரும் பகையாளிகளாக தேர்தல் களத்தில் மோதிக் கொள்வர்;
இதனையும் நம்பி எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என பொதுமக்கள் திணறியும் போயினர்.

இலங்கை அரசியல்
1977-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கே இலங்கை அரசியலுக்குள் வந்தார். அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி.. 28 வயதில் ரணில் அமைச்சரான போது அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கான மொத்த வாக்குகள் 44%. ஆனால் அதே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரணில் விக்கிரமசிங்கே தலைமை வகித்து பிரதமராகவும் ஆண்டனுபவித்த பின்னர் 2020 தேர்தலில் அந்த கட்சிக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 2%. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு எம்.பி.யை கூட மக்கள் கொடுக்கவில்லை. இலங்கை அரசியல் சாசனப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு நியமன எம்.பி. பதவி கிடைத்தது. அந்தப் பதவியையும் கூட ரணிலே வைத்துக் கொண்டார். இதுதான் ரணில் விக்கிரமசிங்கேவின் சுருக்கமான ஜாதகம்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகா குமாரதுங்கவை அகற்றிவிட்டு ராஜபக்சே சகோதரர்கள் கைப்பற்றினர். அந்தக் கட்சியிலும் மைத்ரிபால சிறிசேனா கலகக் குரல் எழுப்ப ராஜபக்சே சகோதரர்கள் தனிக்கட்சி என்றெல்லாம் களமிறங்கினர். 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்துக்கு முன்னரும் இன்று மக்கள் கிளர்ச்சிக்கு முன்னர் வரையிலும் ராஜபக்சேக்களின் கைதான் இலங்கையில் ஓங்கி இருந்தது.

ரணில், ராஜபக்சேக்கள்
2015-ல் மைத்ரிபால சிறிசேன அதிபராகவும் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகவும் பதவி வகித்தார். அந்த தேர்தல் காலங்களில், ராஜபக்சே குடும்பத்தினரின் ஊழல்களை கண்டுபிடித்து கூண்டிலேற்றி தண்டனை பெற்றுத் தருவதே தமது முதல் பணி என வீரமாக முழங்கினார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் அந்த ஆட்சிக் காலத்தில் நடக்கவில்லை. ராஜபக்சேக்கள் மீதான அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளும் எங்கே போயின என்பது எவருக்கும் தெரியாது. தாம் பதவி வகித்த காலத்தில் ராஜபக்சேக்கள் குடும்பத்தின் மீது தூசி கூட விழாத வகையில் அப்படி பத்திரமாகப் பாதுகாத்து கொண்டவர் சாட்சாத் ரணில் விக்கிரமசிங்கேதான். தமது ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள், மத்திய வங்கி பண மோசடி என பல ஊழல் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றை ராஜபக்சே குடும்பம் தோண்டி துருவிவிடாமல் இருக்கத்தான் இந்த பாதுகாப்பையும் வழங்கினார் ரணில் விக்கிரமசிங்கே.

வெடித்த மக்கள் கிளர்ச்சி
இந்த பின்னணியில் காலச் சக்கரங்கள் சுழன்றன..எந்த ராஜபக்சே சகோதரர்களே தங்களின் தெய்வங்கள் என எந்த சிங்கள மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ அதே தென்னிலங்கை சிங்களரே, ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். எந்த அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாமல் தன்னெழுச்சியான மக்கள் கிளர்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை கஜானாவை சூறையாடி கொழுத்த ராஜபக்சேக்களை விட்டுவிடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு காலிமுகத் திடலில் தவமாய் தவமிருக்கின்றனர் பொதுமக்கள். இதனால்தான் பிரதமர் பதவியையே மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவும் நேரிட்டது.

பிரதமரான ரணில்
மே 9-ந் தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுத்தார் கோத்தபாய ராஜபக்சே. அப்போது சஜித் இதனை நிராகரித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி.யாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரதமராக மகுடம் சூட்டப்பட்டது. இது மிகப் பெரும் ஜனநாயகக் கூத்து என்பதை உலகம் நன்கு அறியும். ஆனாலும் உலகம் அமைதி காத்தது. பரம அரசியல் எதிரியான ரணிலுக்கு பிரதமர் பதவியை ராஜபக்சேக்கள் குடும்பம் சும்மாவா கொடுக்கும்?

விடாது துரத்தும் மக்கள்
ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கை மக்களிடத்தில் ஒரு சாப்ட் முகம் உண்டு; சர்வதேச அரங்கிலும் அவருக்கான தொடர்புகளும் மரியாதையும் அதிகம். இந்த முகத்தைப் பயன்படுத்தி தங்கள் மீதான கொலை, கொள்ளை, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ராஜபக்சேக்கள் சதித் திட்டம் தீட்டினர். இந்த சதியை அரங்கேற்ற ஜனநாயகத்துக்கு விரோதமாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கேவும் ஏற்றுக் கொண்டார். தலைக்கு வந்தது தலைப்பகையுடன் போனதே என ராஜபக்சேக்கள் குடும்பம் நம்பியது; கோத்தபாய ராஜபக்சேவின் ஜனாதிபதி பதவி நிலைக்கும் என கணக்குப் போட்டது. ஆனால் மக்கள் சக்தி மகத்தானது; சிங்களப் பேரினவாதத்தை தலையில் தூக்கி வைத்த- ராஜபக்சேக்களை கொண்டாடித் தீர்த்த சிங்கள தேசம் இப்போது ராஜபக்சேக்கள்தான் பரம எதிரிகள் என பிரகடனம் செய்து ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். ராஜபக்சேக்களைக் காப்பாற்றுகிற கூட்டாளிதான் ரணில் விக்கிரமசிங்கே என அறிவித்துவிட்டே ரணிலையும் பதவியை விட்டு வெளியேற்றுகின்றனர். திரைமறைவு அரசியல் எல்லாம் மக்களுக்கு எங்கே தெரியும்? என்கிற தெனாவெட்டு ஆட்டங்களை அரங்கேற்றிய ராஜபக்சேக்களும் ரணில்களும் இப்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும்? எங்கே ஓடினால் உயிர் பிழைக்க முடியும்? என உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications