இலங்கை, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி! சீனா தான் காரணமாம்! என்னென்ன செய்தது தெரியுமா!
கொழும்பு: இலங்கை, பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு சீனா தான் காரணம் என கூறப்படுகிறது. சீனாவில் அதிகளவு வட்டிக்கு கடன் வாங்கிய திட்டங்களை நிறைவேற்றி பலனின்றி இருப்பது தான் இருநாடுகளில் நிலவும் பிரச்சனைக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளாக இலங்கை, பாகிஸ்தான் உள்ளன. இந்த 2 நாடுகளிலும் தற்போது அரசியல் நிலைமை சரியானதாக இல்லை.
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமராக குல்சார் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதற்கு பிறகு அந்நாடு சந்திக்கும் பெரும் பேரிடராக இது அமைந்துள்ளது. இதனால் அதிபர், பிரதமர் என அதிகார பதவிகள் அமர்ந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனை
இலங்கை, பாகிஸ்தான் என 2 நாடுகளிலும் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு அந்நாடுகளின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவிடம் இருந்து இலங்கை, பாகிஸ்தான் அதிகளவில் கடன் வாங்கியதும், சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரசால் உருவான ஊரடங்கும் இந்த 2 நாடுகளையும் வீழ்த்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் நடந்தது என்ன, சீனாவின் பங்கு என்ன என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெள்ளை யானை திட்டம்
இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வெள்ளை யானை திட்டம் என்ற பெயரில் புதிதாக துறைமுகங்கள் அமைக்கப்பட்டன. இலங்கையில் ஹம்பாந்தோட்டை பகுதியிலும், பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகங்களுக்கு சீனா அதிகளவில் கடன் வழங்கியது. இருப்பினும் இந்த துறைமுகங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. சரக்கு போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து இன்றி இத்துறைமுக திட்டங்கள் தோல்வியடைந்தன. இது பாகிஸ்தான், இலங்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.

இலங்கையில் என்ன
இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இங்கிருந்து 18 பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் மத்தள ராஜபக்சே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. உலகில் மிகக்குறைவான அளவில் பயன்படுத்தப்படும் விமான நிலையம் என்ற பெயரை இது பெற்றுள்ளது. அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலக்கட்டத்தில் பெருந்தொகை செலவழித்து கட்டப்பட்ட இந்த விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை சீனாவின் EXIM வங்கியிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் பெற்று அமைக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பார்த்த அளவு லாபம் கிடைக்காத நிலையில் இலங்கையால் கடன் செலுத்த முடியவில்லை. இதனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளது. தற்போதைய பொருளாதர நெருக்கடிக்கு இந்த 2 திட்டங்களும் காரணமாக அமைந்துள்ளது. அதாவது இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் அடையாளமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை கூறலாம். மாத்தலா விமான நிலையம் சில நேரங்களில் நெல்லை சேமித்து வைக்க பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடன் எவ்வளவு
இலங்கைக்கு 51 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் உள்ளது. இந்த மொத்த கடனில் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாக சீனா கூறுகிறது. சீனாவின் EXIM வங்கியால் வழங்கப்பட்ட திட்ட வாரியான கடன்கள் மட்டும் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளன. இதில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே இரண்டு சதவீத சலுகை வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. மீதமுள்ளவை ஆறு சதவீத விகிதத்தைக் கொண்டுள்ளன. இதுதவிர நாணய பரிமாற்றம், வெளிநாட்டு நாணய கால வசதி ஒப்பந்தங்கள் மற்றும் சீன நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் அடங்கவில்லை. இதை சேர்த்தால் கடன் அளவு இன்னும் அதிகரிக்கும். இது இலங்கைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தின.

பாகிஸ்தான் கடன் எவ்வளவு
இதேபோல் பாகிஸ்தானும் சீனாவிடம் இருந்து அதிகளவில் கடன்கள் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு சீன EXIM வங்கி, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 1.6 சதவீத வட்டி விகிதத்தில் 11 பில்லியன் அமெரிக்க டாலரையும், சீனா-பாகிஸ்தான் மின் காரிடார் திட்டங்களுக்கு 5-6 சதவீத வட்டி விகிதத்தில் 15.5 பில்லியன் டாலரையும் பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது. வெள்ளை யானை திட்டம் மூலம் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா கைப்பற்றிய நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை சீனா கைப்பற்றலாம்.

டாலர் மதிப்பீட்டில் கடன்கள்
இலங்கை, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அனைத்து கடன்களும் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் குறிப்பிடப்படுகிறது. இது கடன் வாங்கும் நாடுகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். தங்களது நாட்டு கரன்சிகளின் மதிப்பு குறையும்போது டாலருக்கு நிகரான மதிப்பு அதிகரிக்கும். இது சிக்கலை ஏற்படுத்தும். பாகிஸ்தானில் ஆண்டுக்கு சராசரியாக ஆறு சதவிகிதம் என்ற அளவில் அந்தநாட்டின் ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் இலங்கை கரன்சியின் மதிப்பும் குறைந்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் சீனா வழங்கிய கடன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Recommended Video

தவறான கொள்கை, திட்டம்
இருப்பினும் இந்த இரண்டு நாடுகளின் நெருக்கடியான நிலைக்கு அனைத்துப் பழிகளையும் சீனாவின் தோள்களில் சுமத்த முடியாது. ஏனென்றால் சீனா கடன் வழங்கி இருந்தாலும் நாட்டு தலைவர்கள் அதை உரிய வகையில் செலவு செய்யவில்லை. தவறான பொருளாதார கொள்கை, தவறான திட்டங்கள் மூலம் வீணடித்துள்ளன. இதனால் தான் இருநாடுகளும் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது என ஒரு தரப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் கடனை சரியான வகையில் இருநாடுகளும் பயன்படுத்தி இருந்தால் அந்த நாடுகள் வளர்ச்சி பாதையில் சென்றிருக்கவும் வாய்ப்புள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தான் சீனாவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications