இலங்கையில் ஊரடங்கை மீறி எதிர்க்கட்சியினர் ஊர்வலம்! போலீசாரிடையே தள்ளுமுள்ளு! பரபரப்பு
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடும் பொதுமக்களை தடுக்கும் வகையில் அவசர நிலை பிரகடனம், ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மீறி இன்று கொழும்புவில் எதிர்க்கட்சியினர் ஊர்வலம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது.

ஊரடங்கு அமல்
இதனை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக கண்டித்தனர். அவசர நிலை பிரகடனத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராகவும் இன்று இலங்கை முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தடுக்கும் நோக்கில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று நாளை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.உத்தரவை மீறி ஊர்வலம்

எதிர்க்கட்சி ஊர்வலம்
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகர் கொழும்புவில் இன்று எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சியினர் கண்டன ஊர்வலத்தை இன்று முன்னெடுத்தனர். எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமதேசாவின் வீட்டில் இருந்து ஊர்வலமாக அருகே உள்ள சுதந்திர சதுக்கம் நோக்கி புறப்பட்டனர். இதில் 100க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

கோஷம்- தள்ளுமுள்ளு
ஊர்வலத்தின்போது அவர்கள் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், அவசர நிலை பிரகடனத்தை திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் தடுப்புகள் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி முன்னேற முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

664 பேர் கைது
இதற்கிடையே நேற்று மாலையில் ஊடங்கு அமலானாலும் கூட பல இடங்களில் பொதுமக்கள் வெளியே சுற்றினர். இதனால் மேற்கு மாகாணத்தில் நேற்று 664 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்த போராட்டத்துக்கு சமூக வலைதளங்களில் ஆட்சேர்ப்பு நடைபெற்றது. இதையடுத்து டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்பட பல்வேறு சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications