இலங்கை பொருளாதார நெருக்கடி.. விழுந்தது முதல் விக்கெட்! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரோஷன் ரணசிங்கே
கொழும்பு: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி ரோஷன் ரணசிங்கே என்பவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் கொரோனா காலத்தில் வருமானம் தடைப்பட்டது. இதனால் அந்நாடு அதிகளவில் கடன் வாங்கியது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது.
பிற நாட்டு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.

விலை உயர்வு
இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைகள் எகிறியுள்ளன. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதோடு, மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

அவசர நிலை பிரகடனம்
பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு உள்பட சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் ஆளும் அரசை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை கட்டுப்படுத்தும் வகையில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமைச்சர் ரோஷன் ரணசிங்கே
இதற்கிடையே பொலொன்னருவா மக்களவை தொகுதியில் எம்பியாக இருக்கும் ரோஷன் ரணசிங்கே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எஸ்எல்பிபி கட்சியை சேர்ந்த இவர் அங்குள்ள மத்திய அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சராக செயல்பட்டு வந்தார். இவர் மகான சபைகள் மற்றும் உள்ளாட்சி விவகாரத்துறையை நிர்வகித்து வந்தார்.

மே 1 முதல் ராஜினாமா
இந்நிலையில் இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ரோஷன் ரணசிங்கே இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார். மொத்தம் 7 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடம் மன்னிப்பு
மேலும், தனது மாவட்டத்தில் விவசாயிகள் அதிகமாக வாழும் நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். இந்நிலையில் பிரச்சனைகளை நேரடியாக கூற கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications