என்னது இலங்கையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டதா? இலங்கை பாதுகாப்புத்துறை தந்த விளக்கம்!
கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் போராட்டத்தை தடுத்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட இந்திய ராணுவம் களமிறங்கி உள்ளதாக பரவிய தகவலை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கமல் குணரத்னே மறுத்துள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய பணப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அங்கு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு நாட்டை ஆளும் அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் முடிவுகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவசரநிலை பிரகடனம்
மேலும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி போராட துவங்கி உள்ளனர். மார்ச் 31ல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வீட்டை ஏராளமானவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையானது. இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

சமூக வலைதளங்கள் முடக்கம்
இதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கின்றனர். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை முழுவதும் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்பட பல சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமல்
முன்னதாக போராட்டத்தை தடுக்கும் வகையில் இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி நேரம் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்மூலம் அத்தியாவசி தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும். இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும். இலங்கை ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

களமிறங்கியதா இந்திய ராணுவம்
இதற்கிடையே தான் இலங்கை ராணுவத்தினருடன் சேர்ந்து இந்திய ராணுவத்தினர் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் இலங்கையில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்திய ராணுவம் களம் இறக்கப்பட்டதாக தகவல்கள் பரப்பபட்டடன. இதற்கு இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை மறுப்பு
இதையடுத்து இலங்கையும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கமல் குணரத்னே கூறுகையில், ‛‛இலங்கையில் எந்த வகையான தேசிய பாதுகாப்புக்கான அவசரநிலையையும் சமாளிக்கும் திறன் நம்நாட்டு பாதுகாப்பு படைக்கு உள்ளது. இதனால் வெளிநாட்டு படைகளில் உதவி தேவையில்லை. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்திய படைகள் வந்துள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு இந்திய படையினர், இலங்கையுடன் கூட்டு பாதுகாப்புப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவுகிறது'' என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications