நாங்க இந்தியாவோட மாநிலமா? அதெப்படி தமிழ் தலைவர்கள் மோடிக்கு கடிதம் எழுதலாம்? இலங்கை கடும் எதிர்ப்பு
கொழும்பு: ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
1987-ம் ஆண்டு ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா இடையே இந்தியா- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளாகியும் இந்த சரத்து நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக இந்தியாவும் பலமுறை இலங்கையை வலியுறுத்தியும் எந்த அரசும் இதனை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில் தங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும் என ஈழத் தமிழ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஈழத் தமிழ் தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். இக்கடிதம் கொழும்பில் இலங்கைக்கான இந்திய தூதரிடம் நேற்று வழங்கப்பட்டது.
ஈழத் தமிழ் தலைவர்களின் இந்த முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாவது: இலங்கை ஒன்றும் இந்தியாவின் மாநிலம் அல்ல. நாங்கள் ஒரு தனிநாடு என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசுடன்தான் பேச வேண்டும். இலங்கையுடன் பேசாமல் வேறு எங்கு போய் பேசினாலும் எந்த பயனும் ஏற்படாது. அதனால் இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ் தலைவர்கள் கடிதம் எழுதியது குறித்து எங்களுக்கு எந்த கவலையுமே இல்லை. இவ்வாறு உதய கம்மன்பில கூறினார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications