மீண்டும் கைக்கு வந்தது அதிகாரம்.. இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்பு!
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுள்ளார்.
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்றுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று மதியம் நிறைவு அடைந்தது. சுமார் 12 மணி நேரமாக அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று மாலையில் கடைசியாக அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து காலையில் இருந்து முன்னிலை வகித்து வந்தார். இவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் போட்டி நிலவி வருகிறது.

வெற்றி பெற்றார்
இறுதியில் இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.

என்ன வாக்குகள்
52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார்.

கூட்டணி வேட்பாளர்
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று காலை பதவியேற்றார். இதற்காக கொழும்பில் பெரிய அளவில் விழாக்கள், கொண்டாட்டங்கள் இன்று நடந்தது

வாழ்த்து
இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றார். அதிபர் தேர்தலில் வென்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் இவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications