என்னோட நாய்களை எடுத்துக்கங்க.. வெடிகுண்டுகளை கண்டுபிடிங்க.. ராணுவத்துக்கு பெண் தந்த அதிசய தானம்
இலங்கை ராணுவத்துக்கு 5 வளர்ப்பு நாய்களை அன்பளிப்பாக ஒரு பெண் தந்துள்ளார்.
Recommended Video
கொழும்பு: "இந்தாங்க.. என்கிட்ட இருக்கிற இந்த 5 நாய்களையும் நீங்களே எடுத்துக்குங்க.. பயிற்சி கொடுங்க.. வெடி பொருட்களை கண்டுபிடிக்க இந்த நாய்களுக்கு டிரெய்னிங் தாங்க" என்று ஒரு பெண் தான் வளர்த்து வரும் நாய்களை இலங்கை ராணுவத்துக்கு நன்கொடையாக அளித்தார்.
இலங்கை குண்டுவெடிப்புக்கு பிறகு அங்கே ஒருநாள்கூட யாரும் நிம்மதியா இல்லை.. இருக்கவும் முடியல. 250 பேருக்கும் மேலாக கொல்லப்பட்ட பாதிப்பு இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஒரு பெண் தன் நாய்களை ராணுவத்துக்கு தந்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் டாக்டர் ஷிரு விஜெமானே, இவர் ஒரு சர்வதேச பல்கலைக்கழக விரிவுரையாளர். 5 ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்களை வளர்த்து வந்திருக்கிறார். எல்லா நாயும் ஒரே குடும்பத்தை சேர்ந்ததுதான்!
தாய் நாய்க்கு 2 வயசாம்.. மற்ற நாய்களுக்கு இப்பதான் 6 மாசம் ஆகுதாம். இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் அமரசேகராவை கொழும்புவில் உள்ள வீட்டிற்கே வரவழைத்து இந்த நாய்களை பரிசாக தந்திருக்கிறார் இந்த பெண்.
வெடி பொருட்கள், போதை மருந்துகளை கண்டுபிடிக்க ராணுவத்தினர் சிரமப்படுவதால் இந்த நாய்களை நன்கொடையாக அளித்துள்ளாராம். வெடிகுண்டுகளை கண்டுபிடித்து தருவது சம்பந்தமான டிரெயினிங் தந்தால், குண்டுவெடிப்பு போன்ற நெருக்கடியான நேரத்தில் நாய்களின் மோப்ப சக்தி பெரிய உதவியாக ராணுவத்துக்கு இருக்கும் என்று இவர் சொல்கிறார்.
அதன்படி இந்த 5 நாய்களும், ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. கொஞ்ச நாள் டிரெயினிங் ஆன பிறகு நாய்களுக்கு முக்கிய பொறுப்பு தரப்படுமாம்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications