இலங்கைக்கு மீண்டும் இந்திய ராணுவமா? பட்டதெல்லாம் போதாதா? சு.சுவாமியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
கொழும்பு: இலங்கையில் பொதுமக்கள் அமைதிவழிப் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதற்கு சிங்களர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் மக்கள் உயிர்வாழவே முடியாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத அளவுக்கு திறமையற்ற அரசு. இதனால் வெகுண்டெழுந்த சிங்களர், ஜனாதிபதி கோத்தபாயவும் பிரதமர் மகிந்தவும் வீட்டுக்குப் போகட்டும் என போர்க்கொடி தூக்கினர்.

இலங்கை கிளர்ச்சி
கடந்த சில மாதங்களாக இலங்கையில் இந்த கிளர்ச்சி தொடருகிறது. அதுவும் கொழும்பு காலிமுகத் திடலில் துளி வன்முறையும் இல்லாமல் அமைதி வழியில் இரவும் பகலுமாக சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என மூவின மக்கள் ஒருங்கிணைந்து போராடுகின்றனர். மக்களின் இந்த ஒற்றுமையான போராட்டம் இலங்கையில் அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்தது. இதனால் தமது பதவி பறிபோகிறது என்பதால் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான வன்முறையை ராஜபக்சே ஏவிட்டார்.

மகிந்த தப்பி ஓட்டம்
ஆனால் நேற்று வரை அமைதியாக காலிமுகத் திடலில் மையம் கொண்டிருந்த போராட்டமானது புயலாக தென்னிலங்கை முழுவதும் சுழன்றடித்தது. வன்முறையை ஏவிவிட்ட ராஜபக்சே தொடங்கி அவரது ஆதரவு அரசியல்வாதிகள் அத்தனை பேரினது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. இலங்கையில் ராஜபக்சேவும் அவரது ஆதரவாளகளும் வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது. இதனால் மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்துடன் கடற்படை கப்பல் மூலம் தப்பி ஓடிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய ராணுவத்தை அனுப்பனுமாம்
இந்த நிலையில் அண்டை நாடான இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த கருத்தில் பட்டும் படாமலும்தான் தமது நிலையை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த கருத்து வெளியான சிறிது நேரத்தில் இந்தியாவில் ஆளும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்; இலங்கையின் நிலவரத்தை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும் என்றெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்திய ராணுவத்தை அனுப்பனுமாம்
இந்த நிலையில் அண்டை நாடான இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த கருத்தில் பட்டும் படாமலும்தான் தமது நிலையை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த கருத்து வெளியான சிறிது நேரத்தில் இந்தியாவில் ஆளும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்; இலங்கையின் நிலவரத்தை இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும் என்றெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சிங்களர் எதிர்ப்பு
இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவெல்லாம் முடியாது. கடந்த காலங்கள் இந்திய ராணுவத்துக்கு எண்ணற்ற பாடங்களை இலங்கை மண்ணில் கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்வுகளை எல்லாம் சுட்டிக் காட்டி, மீண்டும் இந்தியா ராணுவ ரீதியாக இலங்கை விவகாரத்தில் தலையிடக் கூடாது என சிங்களர் பலரும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவில் கடுமையான சொற்களால் பதிவிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications