இலங்கையில் உச்சகட்ட பதற்றம்- மகிந்த ராஜபக்சே வீடு முன் 3,000 மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்!
கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இலங்கையில் சீரழிந்துவிட்ட பொருளாதார பேரழிவுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி பெரும் போராட்டங்கள் தொடர்ந்து கொழும்புவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராஜபக்சேக்கள் அரசு படுதீவிரம் காட்டி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

மேலும் போராட்டங்களில் ஈடுபடுவோரை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அரசியல் குழப்பமும் தொடருகிறது.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இடைக்கால அரசாங்கமும் எனது தலைமையில்தான் அமைய வேண்டும் என்கிறார் மகிந்த ராஜபக்சே. அத்துடன் சிங்களரைப் போல தமிழரும் ராஜபக்சேக்களுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக கோரி அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் இன்று மிகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போராட்டத்தின் ஒருபகுதி விஜோராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சே வீடு முன்பாக திரண்டது. மகிந்த ராஜ்பாக்சே வீட்டை முற்றுகையிட்ட இந்த போராட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என்கிற பதற்றம் நிலவியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications