கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே போராட்டக்காரர்களை ராஜபக்சேக்கள் பாணியில் ரணில் விக்கிரமசிங்கே ஒடுக்க ராணுவத்தை களமிறக்கியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக அடக்குமுறைகளை மீறி கொழும்பில் போராட்டம் தொடருகிறது.

இலங்கையில் பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கிறது பொருளாதாரப் பேரழிவு. இதனை சீரமைக்க முடியாததால் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி இரவும் பகலுமாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும், ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் விலகினர். மேலும் கோத்தபாய ராஜபக்சே, இலங்கையைவிட்டே தப்பி ஓடி தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.

கேரளா-நீட் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரம்-மேலும் 2 ஆசிரியர்கள் கைது- சிக்கியோர் எண்ணிக்கை 7 !கேரளா-நீட் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரம்-மேலும் 2 ஆசிரியர்கள் கைது- சிக்கியோர் எண்ணிக்கை 7 !

ஜனாதிபதியாக ரணில்

ஜனாதிபதியாக ரணில்

ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜினாமா செய்த நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை அரசியல் சாசனப்படி அந்நாட்டு நாடாளுமன்ற எம்.பி.க்களால் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து பிரதமர் பதவி காலியானதால் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கொழும்பில் ஒடுக்குமுறை

கொழும்பில் ஒடுக்குமுறை

இந்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே, கொழும்பு காலிமுகத் திடலில் கூடாரங்கள் அமைத்து போராடிய பொதுமக்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தையும் போலீசையும் களமிறக்கினார் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் நேற்று நள்ளிரவு முதல் தலைநகர் கொழும்பு போர்க்களமாக மாறிவிட்டது. ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கறுப்பு தினம்

கறுப்பு தினம்

ரணில் விக்கிரமசிங்கேவின் ஒடுக்குமுறைகளைக் கண்டித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைதன்மைக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். படையினர் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது தொடர்பான வீடியோ ஆதரங்கள் வெளியாகி உள்ளன. சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியளாலர்கள் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என தெரிவித்துள்ளது.

Recommended Video

    Srilanka-வின் புதிய அதிபர்... யார் இந்த Ranil Wickremesinghe? *Srilanka
    அமெரிக்கா, கனடா

    அமெரிக்கா, கனடா


    ரணில் விக்கிரமசிங்கேவின் ராணுவ ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா மற்றும் ஐநாவின் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர் ஜூலி சங் கூறுகையில், நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலை தருகின்றன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.

    இதேபோல் ஐநா சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி கூறுகையில், ராணுவத்தின் அடக்குமுறை மிகப் பெரும் கவலை அளிக்கிறது. மக்கள் போராட்டங்களை கண்காணிக்க பத்திரிகையாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு உரிமை உண்டு என கூறியுள்ளார். ரணிலின் இந்த நடவடிக்கைக்கு கனடா, பிரிட்டன் ,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த ஒடுக்குமுறைகளக் கண்டித்து கொழும்பில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    English summary
    US Ambassador to Sri Lanka Julie Chung said that "deeply concerned about actions taken against Colombo protesters".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X