ஏதாவது செய்ங்க.. பொருளாதார பிரச்சினையை தீருங்க.. இலங்கை அரசியல்வாதிகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும் அசாதாரண சூழலை தீர்க்க புதிதாக அமையும் அரசு உடனடித் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி சிக்கித் தவித்துள்ளது. பணத்தை செலுத்தாததால் பெட்ரோல் டீசல் நிறுவனங்கள் இலங்கைக்கு டீசல் தர மறுத்துவிட்டன.
இதனால் மக்கள் பெட்ரோல் டீசல் கிடைக்காமலும் இருக்கும் பெட்ரோல் டீசலை பெற பங்க்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்கதையானது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

தொழில்கள் பாதிப்பு
ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. அது போல் அரசு கஜானாவும் காலியாக உள்ளதால் அரசு ஊழியர்களும் ஊதியமின்றி தவித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு ராஜபக்ச அரசை துரத்துவதுதான் என மக்கள முடிவு செய்தனர்.

போராட்டம்
இதையடுத்து தங்கள் போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் முன்னெடுத்து வருகிறார்கள். பிரதமராக இருந்த ராஜபக்சவை மக்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அனைத்து கட்சி அரசு அங்கு அமைந்தது. பிரதமராக ரணில் விக்கிரசிங்கே பதவியேற்றார்.

பொருளாதாரம்
எனினும் இலங்கை பொருளாதாரத்தில் எந்த வித வளர்ச்சியும் எட்டவில்லை. இதையடுத்து நேற்றைய தினம் இலங்கை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அதிபர் மாளிகையே போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது.

அசாதாரண சூழல்
தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் பிரதமர் ரணிலும் அதிபர் கோத்தபயவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை மக்களின் அதிருப்தியை தணிக்க புதிதாக அமையும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். நீண்ட காலத்திற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை இலங்கை எட்டுவதற்கான முயற்சிகளை வேகமாக செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications