கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குண்டு வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது… நடவடிக்கை எடுக்காதது ஏன்?... அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கையில் குண்டு வெடிப்பு குறித்து போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பை அதிகரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் 100 பேர் பலியாகி உள்ளனர். 280 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

     Warning about the bomb blast, why not take action? asking Public

    10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்!10 ஆண்டு அமைதிக்கு பின் குண்டுவெடிப்பு.. இலங்கையில் இறுதி போருக்கு பின் மிகப்பெரிய தாக்குதல்!

    இந்த தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே நேரம், 10 நாட்களுக்கு முன்பு, இலங்கையில் பெரும் தாக்குதல் நடத்த சில அமைப்பினர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ராணுவ பாதுகாப்பு, சோதனைகள் சொல்லும் அளவுக்கு இல்லாமல் போனது தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதிற்கு காரணம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    ஈஸ்டர் தினத்தை குறி வைத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சதிதிட்டம் பல நாட்களாக தீட்டப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்பை தொடர்ந்து, ராணுவத்தினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே, இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள், உதவி தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

    English summary
    The public has been accused warning bomb blasts Of Police in Sri Lanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X