சாப்பாடு இல்லை..13 மணி நேர பவர்கட்.. “அந்த பேப்பர்”கூட இல்லை..இலங்கை பொருளாதாரம் மோசமடைந்தது எப்படி?
கொழும்பு : உணவுப் பற்றாக்குறை, 13 மணி நேர மின்வெட்டு, காகிதம் இல்லாததால் தேர்வுகள் ரத்து என பலத்த பொருளாதார பின்னடைவை மக்கள் சந்தித்துள்ள நிலையில் அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறு மோசமடைந்தது என்பது குறித்து பார்க்கலாம்..
1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்ட மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு ஆகியவற்றை இலங்கை கண்டுள்ளது.
வியாழன் அன்று இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி அவரது வீட்டிற்கு வெளியே மக்கள் வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமானதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நெருக்கடி
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே வியாழன் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக அவர் பதவி விலகக் கோரி போராடியுள்ல நிலையில் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 45 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 5 போலீசார் காயமடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொட, கல்கிசை மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

மக்கள் போராட்டம்
இலங்கை மக்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், நாட்டில் என்ன நடக்கிறது - பொருளாதார நெருக்கடிக்கான காரணம் முதல் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது வரை விரிவாக பார்க்கலாம். 2006ஆன் ஆண்டில், உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் பெருமளவிலான கடன்களை பெற்று, தேசத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த முயன்றது. இது குறுகிய காலத்தில் உதவிய நிலையில், பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, 1.6 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீண்டனர்.

வர்த்தகப் பற்றாக்குறை
'எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்' என்ற பழமொழி இலங்கையைப் பொருத்தவரை உண்மையாக உள்ளது. நாட்டின் வேகமான வளர்ச்சியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 சதவிகிதம் வெளிநாட்டுக் கடனுக்கு வழிவகுத்தது. 2019ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் இலங்கை வீழ்ச்சியை எதிர்கொண்டு பின்னர் திவால்நிலையில் நிலை கொண்டிருந்தது. 2018இல் $5.6 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறையை சமநிலைப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த சுற்றுலாப் பயணிகள், கிட்டத்தட்ட ஒரே இரவில் காணாமல் போயினர்.

இலங்கைக்கு பெரிய அடி
பொருளாதாரத்திற்கு பெரிய அடியை ஏற்படுத்தியதாக தி கான்வெர்சேஷன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன, குறிப்பாக முந்தைய ஆண்டு ஒரு பெரிய வரிக் குறைப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்கப் கஜனாக்கள் தீர்ந்தன. பெரிய கடனுக்கான வட்டியை செலுத்துவது 2020ஆம் ஆண்டில் அரசாங்க வருவாயில் 72 சதவீதத்தை எடுத்துக் கொண்டது. 2021ஆம் ஆண்டில், பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சர்வதேச உதவியை நாடுமாறு இலங்கையை வலியுறுத்தியதால், மத்திய வங்கி அதன் அண்டை நாடுகளிடம் இருந்து கடன் வாங்குவது, ரூபாயின் மதிப்பைப் பேணுவது மற்றும் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

பொருளாதாரம் பாதிப்பு
எண்ணெய், கோதுமை மற்றும் பல பொருட்களின் சர்வதேச விலைகளை உயர்த்திய ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக 2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலையின் தாக்கத்திற்கு அப்பால், மாஸ்கோவுக்கான விமானங்கள் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இலங்கையின் சுற்றுலாத் துறையை யுத்தம் மேலும் அச்சுறுத்தியுள்ளது. போருக்கு முன்னர், ரஷ்யர்கள் அடிக்கடி இலங்கை சுற்றுலாப் பயணிகளில் பெரும் பங்கைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் இருளில் போராட்டம்
பொருளாதாரப் பேரழிவு இலங்கைப் பொது மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 13 மணி நேர மின்வெட்டை நாடு பதிவு செய்துள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டதால், மக்கள் இருளில் போராடி வருகின்றனர். மீனவர்கள் மீன்பிடித்தல் மற்றும் கடைகள் மற்றும் தொழில்களில் இருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தை கட்டுப்படுத்துகின்றனர். உயிர்காக்கும் மருந்துகள் தீர்ந்துவிட்டதால் மருத்துவமனைகளில் வழக்கமான அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அல் ஜசீரா அறிக்கையின்படி, தலைநகரில் உள்ள இலங்கையின் தேசிய மருத்துவமனையும் வழக்கமான நோயறிதல் சோதனைகளை நிறுத்தியுள்ளது.

மின்வெட்டு தொடரலாம்
இலங்கையின் மின்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திட பேசுகையில், மே மாதம் வரை மின்வெட்டு தொடரலாம் என்று கூறினார். வியாழன் அன்று, டீசல் இனி விற்பனை இல்லை என்று இலங்கை தெரிவித்தது. இதனால் போக்குவரத்து முடங்கியது. பெட்ரோல் விற்பனையில் உள்ளது. ஆனால் தட்டுப்பாடு நிலவுவதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் தங்கள் கார்களை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பால், உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

மீள்வது சிரமம்
மன்னாரைச் சேர்ந்த ஆர்வலர் வி.எஸ்.சிவகரா இந்தியன் எக்ஸ்ரெஸ்ஸிடம் கூறுகையில், அரிசி போன்ற பொருட்களின் விலை கிலோகிராம் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது, சர்க்கரை ரூ.300க்கு விற்கப்படுகிறது. பால் மாவு 400 கிராம் ரூ.790க்கு விற்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவக உரிமையாளர்கள் ஒரு கப் பால் டீயின் விலையை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்சிடும் தாள் கூட கிடைப்பது கடினம், இதனால் பள்ளிகள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியுள்ளது. இவ்வகையான நெருக்கடிகளால் இலங்கை மீண்டும் மீள்வது கடினம் என்றே பொருளாதார வல்லுநனர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications