ஒரு நல்ல ஆல் ரவுண்டரா எடுங்கப்பா.. இதோ உங்களுக்காக விஜய் ஷங்கர்! டிரெண்டாகும் ஐபிஎல் மீம்ஸ்
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக நேற்று சுவாரசியமான சம்பவங்கள் பல நடந்தன. முக்கியமான சில வீரர்கள் நேற்று ஏலம் போனார்கள். தொடக்கத்தில் சிஎஸ்கே அணி மிக்ஸர் சாப்பிட்டாலும் கடைசி கட்டத்தில் முக்கியமான வீரர்களை எடுத்தனர். இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
ஆனால் ஆர்சிபி அணி கடைசி வரை முக்கியமான வீரர்களை எடுக்கவில்லை. அந்த அணி கே எல் ராகுலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை கேட்கவில்லை. 14 கோடி ரூபாய்க்கு கிடைத்தும் கூட பெங்களூர் அணி அவரை எடுக்க போகவில்லை. அதேபோல் சாஹலை அந்த அணி எடுக்கவில்லை. இரண்டு முறை மட்டுமே அந்த அணி சாஹலை ஏலம் கேட்டது. அதன்பின் ஏலம் கேட்கவே இல்லை. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இதோடு இல்லாமல் கடந்த சீசன்களில் அந்த அணிக்கு சிறப்பாக ஆடிய அதிக விக்கெட் டேக்கர் முகமது சிராஜை பெங்களூர் அணி மிஸ் செய்துள்ளது. இது போக பண்டை பெங்களூர் அணி எடுத்து இருக்கலாம். ஆனால் அவருக்காக போராடவில்லை. இது போக ஷ்ரேயஸ் ஐயரை எடுக்கவும் போராடவில்லை. அந்த அணியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. பவுலர்களிலும் பெங்களூர் பெரிதாக யாரையும் எடுக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி கோர் டீமை உருவாக்குவதிலேயே திணறி வருகிறது.

இது போக மும்பை அணியும் பெரிய அளவில் பணம் இல்லாத காரணத்தால் வீரர்களை எடுக்கவில்லை . இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நேற்று சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட வீரர்கள்:
நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்

ஆனால் பெங்களூர் அணி இது போல முக்கியமான வீரர்களை எடுக்கவில்லை. மும்பை அணியும் பெரிதாக வீரர்களை எடுப்பதில் கவனம் செலுத்தவே இல்லை.
ஏலம் போன முக்கிய வீரர்கள்: ரிஷப் பண்டை அணியில் எடுக்கவும் கடுமையான போட்டி நிலவியது. முக்கியமாக ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டி போட்டன.

ஆனால் லக்னோ அணி விடாமல் இவரை எடுக்க தீவிரமாக ஆர்வம் காட்டியது . 20.5 கோடி ரூபாய் வரை இதற்காக லக்னோ அணி போட்டியிட்டது. அதன்பின் லக்னோ அணியுடன் போட்டியிட மற்ற அணிகள் வரவில்லை.
இதையடுத்து டெல்லி அணி அவரை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து லக்னோ அணி அவரின் விலையை 27 கோடி ரூபாயாக உயர்த்தியது. ஆனால் டெல்லி அணி அவரை அதன்பின் ஆர்டிஎம் எடுக்க விரும்பவில்லை. இதையடுத்து லக்னோ அணி அவரை எடுத்தது.

2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான ககிசோ ரபாடாவை குஜராத் அணி எளிதாக எடுத்துள்ளது. இவரை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது.
மும்பை அணி எப்போதும் பவுலர்களை அதிக விலைக்கு எடுக்கும். அந்த வகையில் இவரை எடுக்கவும் தீவிரமாக முயன்றது. அதன்படியே 9.5 கோடி ரூபாய் வரை இவரை எடுக்க மும்பை அணி முயன்றது. ஆனால் குஜராத் அணி விடாமல் துரத்தியது. 10.5 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி இவரை எடுக்க முயன்றது. அப்போது பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த விரும்புகிறதா என்று கேட்கப்பட்டது. பஞ்சாப் அணி இதை விரும்பவில்லை என்றதும்.. குஜராத் அணி 10.5 கோடி ரூபாய்க்கு அவரை தூக்கியது.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றவர்.. மிட்சல் ஸ்டார்க். கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு அந்த சீசனில் கொல்கத்தா வெல்லவும் ஒரு காரணமாக இருந்தார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான மிட்சல் ஸ்டார்க்கிற்கு இந்த முறையும் கடுமையான போட்டி நிலவியது.

டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே அவருக்கு ஆர்வம் காட்டியது. கொல்கத்தா அணியும் அவரை மீண்டும் எடுக்க தீவிரமாக முயன்றது. 9 கோடி ரூபாய் வரை இரண்டு அணிகளும் மாறி மாறி போட்டியிட்டுக்கொண்டன. இதில் 9 கோடிக்கு பின் வேகம் குறைய பெங்களூர் அணியும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆனது. பெங்களூர் அணிக்கு நல்ல வீரர் வேண்டும் என்பதால்.. பெங்களூர் அணியும் தீவிரமாக முயன்றது. கடைசியாக 11.75 கோடி ரூபாய்க்கு மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications