Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரை நிர்வாண கோலத்தில்.. கோயிலுக்குள் கிடந்த பெண்ணின் சடலம்.. திட்டக்குடி அருகே பரபரப்பு

கோயிலுக்குள் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.. அந்த சடலம் அரை நிர்வாணமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

லாக்டவுனில் இருந்தாலும், குற்ற செயல்கள் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.. ஊரடங்கிலும் வன்முறைகளும், அதன் எண்ணிக்கையும் குறையவில்லை... குறிப்பாக பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான அநீதிகள் பெருகி வருகின்றன.

 45 year old woman murdered near cuddalore

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திட்டக்குடி அடுத்துள்ள பகுதியில் மேலகல்பூண்டி அய்யனார் என்ற கோவில் உள்ளது.. சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கோயில் கொஞ்சம் ஃபேமஸ் ஆனது.

இந்த கோயிலுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதையடுத்து போலீசாரும் அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர்.. அவருக்கு 45 வயதிருக்கும்.. அரை நிர்வாணமாக அந்த பெண் இருந்துள்ளார்.. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடகாரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவர் மனைவி கருப்பாயி என்பது மட்டும் முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.. ஆனால், இவர் எப்படி இறந்தார்? யாராவது கொலை செய்தார்களா? ஏன் கொன்றார்கள்? என தெரியவில்லை.

மர்மநபர்கள் பலாத்காரம் செய்துவிட்டு, கோயிலுக்குள் கொண்டு வந்து சடலத்தை போட்டுவிட்டு போயிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது... இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+