கடலூர் அருகே மிகப் பெரிய அளவில் மிதந்து வந்த மர்ம பொருள்.. ஆச்சரியத்துடன் பார்த்த மீனவர்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கும் வேலங்கிராயன் பேட்டை கடற்கரைக்கும் இடையே கடலில் இன்று காலை பெரிய அளவிலான மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதனைப் பார்த்த மீனவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் வியந்து போனார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர், அதனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த பொருள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரை வேலங்கிராயன் பேட்டை கடற்கரை பகுதியில் இன்று காலை வித்தியாசமான பொருள் ஒன்று மிதந்து வந்தது. மிகப் பெரிய அளவிலான மர்மப் பொருள் மிதந்து வருவதை கண்ட அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தொடர்ந்து மீனவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மர்ம பொருள் குறித்து தகவல் தந்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து புது சத்திரம் போலீஸார், பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அந்த மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அது கடலில் எல்லைக்காக பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கலாம் அல்லது கப்பலில் மிதக்கும் போயா என்ற பொருளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்தப் பொருளில் மாலத்தீவு என்று எழுதப்பட்டுள்ளது என்றும் கப்பலில் இருந்து அறுந்து இது வந்திருக்கலாம் என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர் அந்த பொருளை கைப்பற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றுவிட்டார்கள். கடலில் மிதந்து வந்த அந்தப் பொருளை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
பாம்பன் புதிய ரயில் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலம் வருகிற 6-ந்தேதி திறக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். பாம்பன் கடலில் புதிதாக ரூ.545 கோடியில் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய ரயில் பாலத்தை 2-வது நாளாக நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாலத்தில் நின்று பழைய மற்றும் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து புதிய ரயில் பாலம் வழியாக நடந்து சென்றார். மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ரோடு பால உயரத்திற்கு தூக்குப்பாலம் திறந்தும் ஆய்வு செய்தார்
இந்த ஆய்வு குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை வருகிற ஏப்ரல் 6-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். நிகழ்ச்சி விவரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும். புதிய ரயில் பால திறப்பு விழா நிகழ்ச்சியை மண்டபத்தில் நடத்துவதா? அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா? என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications