16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்.. போக்சோவில் கைது
Recommended Video

கடலூர்: கடலூரில் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவருக்கு கணவர் இல்லை. இரு மகள்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றுவதற்காக இருவரையும் ஊரிலேயே தங்க வைத்துவிட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய 16 வயது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ராகுல் (19) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

தனிமையில் சந்திப்பு
இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் சென்று காதலை வளர்த்துக் கொண்டனர். இதன் விளைவு அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து ராகுலிடம் சொன்னபோது மீண்டும் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பலமுறை தனிமையில் சந்தித்துள்ளார்.

மருத்துவமனையில்
கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதாக அவரது உறவினரிடம் கூறியுள்ளார். அப்போது உடனே ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அப்போதே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதனை தொடர்ந்து தாயும், சேயும் குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொய் கூறிய இளைஞர்
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாய் சம்பவ இடத்துக்கு வந்தார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் ராகுலை அழைத்து விசாரித்தபோது அந்த சிறுமிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

சிறைக்கு சென்ற இளைஞர்
ராகுல் பொய் கூறுகிறார் என்பதை அறிந்த போலீஸார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டியதுதான் என மிரட்டினர். அதற்கு ராகுல், அந்த மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே நான் சிறைக்கே செல்கிறேன் என கூறினார்.

எதிர்பார்ப்பு
16 வயது மாணவியுடன் தனிமையில் இருந்து விட்டு தற்போது பிரச்சினை என வந்தவுடன் ஜாதியை இழுக்கும் இந்த ராகுல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications