கடலூர் ஆசிரியை பயங்கர கொலையில் திடீர் திருப்பம்.. தேடப்பட்ட கொலையாளி தற்கொலை
Recommended Video

கடலூர்: கடலூரில் பள்ளி ஆசிரியை பயங்கரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலையாளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ரம்யா (23). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒரே பேருந்தில் சென்று வந்ததால் நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் ராஜசேகருக்கு ரம்யா மீது காதல் ஏற்பட்டது.

சம்மதிக்க
தனது விருப்பத்தை ரம்யாவிடம் கூறியுள்ளார். அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் விடாமல் ரம்யாவை விரட்டி விரட்டி காதலை வெளிப்படுத்தியுள்ளார். ரம்யாவோ, "நாம் இருவரும் வேறு வேறு சமூகத்தினர். எங்கள் வீட்டில் நிச்சயம் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

ரம்யா வீட்டில்
எனவே உங்கள் வீட்டில் பெரியவர்களை அழைத்து வந்து எங்கள் வீட்டில் பேச சொல்" என ரம்யா கூறிவிட்டார். இதனால் பாதி மகிழ்ச்சி அடைந்த ராஜசேகர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ரம்யாவின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை.

கழுத்தறுத்த ராஜசேகர்
இதனால் ரம்யாவும் ராஜசேகரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இது ராஜசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 22-ஆம் தேதி காலை பள்ளிக்கு வந்த ரம்யா, அங்கு தனியாக இருக்கும் போது ராஜசேகர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

குறுஞ்செய்தி
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரம்யாவின் சடலத்தை அப்புறப்படுத்தினர். கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜசேகரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜசேகரின் தங்கை செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தியை ராஜசேகர் அனுப்பியிருந்தார்.

பதற்றம்
அதில் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அனுப்பியுள்ளார். இதையடுத்து அவரது செல்போனை போலீஸார் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருநாவலூர் காட்டுப் பகுதியில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றினர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications