"விஜய் என்ன சொன்னாருங்க" லஞ்சத்தால் விவசாயிகள் ஆவேசம்! நெல் கொள்முதல் நிலையத்தில் அமுதா ஐஏஎஸ் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் கோதண்டபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.55 லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரை அடுத்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடமும் விவசாயிகள் புகார் அளித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கோதண்டபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

cuddalore amudha ias

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், விஜய் ஆட்சியில் லஞ்சமே வாங்க மாட்டோம் என்றார்கள், ஆனால் ஒரு மூட்டைக்கு ரூ 55 கொடுத்தால்தான் பில்லே போடுகிறார்கள். நான் 115 மூட்டை நெல்மணிகளை கொண்டு வந்தேன்.

அதற்கு ரூ 6,325 பெற்றுக் கொண்டு பில் போட்டனர். பின்னர் மழையிலும் வெயிலும் அந்த நெல் 18 நாட்கள் இருந்த நிலையில் பின்னர் அந்த நெல் மூட்டைகள் மேல் போடப்பட்டிருந்த தார்பாயை கூட கொடுக்காமல் வைத்துக் கொண்டனர் என்றார்.

இந்த நிலையில் கடலூர் கோதண்டராமபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் அமுதா ஐஏஎஸ் ஆய்வு நடத்தினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகளும் வேளாண் துறையும் சேர்ந்து நடத்தி வருகிறது.

அரசு நிலம் இருந்தால் அதில் நடத்துவார்கள். இல்லாவிட்டால் விவசாயிகள் நிலம் கொடுப்பார்கள். அதில் கொள்முதல் நிலையம் அமைப்பது வழக்கம். அரசு ஏற்கெனவே விவசாயிகளிடம் லஞ்சம் கேட்க கூடாது என திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது.

அதற்கு தேவையான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளோம். அதிகாரிகள் எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறார்கள். விவசாயிகள் புகார் கொடுத்தால் உடனே நான் நடவடிக்கை எடுக்கிறேன். உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

அது போல் சேத்தியாத்தோப்பை அடுத்த பூதங்குடி, அள்ளூர், வெள்ளியக்குடி, பரிபூரணநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி நெல்லை அறுவடை செய்த விவசாயிகள், பூதங்குடி கொள்முதல் நிலைய வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டி வைத்து, விற்பனைக்காக 25 நாட்களுக்கு மேலாக காத்திருந்தனர்.

இந்த நிலையில் இதுவரை 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாம். அதற்கு கூட ரூ 55 லஞ்சமாக பெற்றதாக சொல்லப்படுகிறது. இதை கண்டித்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+