குறிஞ்சிப்பாடி டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கியதால் மதுப்பிரியர்கள் வாக்குவாதம்
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி டாஸ்மார்க் கடையில் எம்ஆர்பி விலையை விட பத்து ரூபாய் கூடுதலாக பெறப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மது பிரியர்கள், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் அருகே டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இங்கு அரசு அனுமதித்த விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மது பிரியர்கள் விற்பனையாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விற்பனையாளர்களிடம் மது பிரியர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, கடலூர் மேலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தரப்படுகிறது என விற்பனையாளர்கள் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மது பிரியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கேள்விகளால் துளைத்த மது பிரியர்களை சமாளிக்க முடியாமல் ஷட்டரை அடைத்த டாஸ்மார்க் ஊழியர்கள் மது விற்பனையை நிறுத்தி வைத்தனர். மேலும்
காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் காவல்துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
டாஸ்மார்க் நிர்வாகம் அனுமதித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டும் எச்சரிக்கை விடுத்தும், அதனை துளியும் கண்டுகொள்ளாமல் கூடுதல் விலைக்கு தொடர்ந்து மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். அரசின் உத்தரவை மதிக்காமல் அரசுக்கு அவ பேரு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று செயல்படும் டாஸ்மார்க் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
