1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்.. போட்டி போட்டு வாங்கக் குவிந்த மக்கள்.. பரபரத்த கடலூர்!
கடலூர்: கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு காய்கறி கடையில் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது
வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதனை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடலூர் திருப்பாப்புலியூர் பகுதியிலுள்ள பான் பரி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடை ஒன்றில் பெங்களூரிலிருந்து 22 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வெங்காயம் சிறிய அளவில் உள்ள வெங்காயம் 20 ரூபாய்க்கும், நடுத்தர வெங்காயம் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த தகவலறிந்த கடலூர் நகர மக்கள் அந்தக் கடை முன்பு குவிந்துள்ளனர். இதுவரை சுமார் 15 டன்னுக்கு மேல் வெங்காயம் விற்பனையாகி உள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நபர் ஒருவருக்கு இரண்டரை கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. வெங்காயம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் கடலூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையிலும் கூட தலைமைச் செயலக வளாகத்தில் கிலோ வெங்காயம் 50 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதேபோல ஆங்காங்கு மக்களுக்காக குறைந்த விலையில் வெங்காய விற்பனை அதிகரித்து வருவதால் விலை விரைவில் மட்டுப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

இன்னொரு கடையிலும்
கடலூர் உழவர் சந்தையில் உள்ள ஒரு கடையில் இன்று காலை 1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடலூர் பழைய டவுன் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நபர் ஒன்றுக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படுகிறது. வெங்காயத்தை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications