"தமிழுக்கு முடிவுரை".. கேப்பே விடாத அண்ணாமலை.. நாளை கடலூரில் களமிறங்கும் "காவி".. மாஸ்டர் பிளான்!
கடலூர்: தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வாரம் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிந்தி மொழி குறித்த அமைச்சர் அமித் ஷா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து இந்த தீர்மானத்தை தமிழ்நாடு நிறைவேற்றியது.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய நாட்டின் ஆட்சி, அலுவல் மொழியாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.
இந்த நிலையில்தான் தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது.

போராட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆளும் திமுக மீது பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது.

போராட்டம்
இவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. போலீஸ் இதில் மெத்தனமாக செயல்படுகிறது என்று அண்ணாமலை புகார் வைத்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில்தான் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுக்க நாளை போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுகவை கண்டித்து எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலை
தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. பாஜக சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே மிகப்பெரிய அளவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள இருக்கிறார். தமிழுக்கு எதிராக திமுக செயல்படுகிறது.

தமிழை காக்கும் போராட்டம்
ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழுக்கு மறைமுகமாக திமுக குழி தோண்டுகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்களிடம் உண்மையை உணர்த்தும் விதமாக நாங்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுக்க இந்த போராட்டத்தை பிரம்மாண்டமாக நடந்த பாஜக தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடலூர் போராட்டத்தில் புதுச்சேரி பாஜகவினர் பலரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications