கோழிகள் கொத்துக் கொத்தாக பலி.. கடலூரில் கன்பார்ம் ஆன பறவைக் காய்ச்சல்.. கதிகலங்கும் பண்ணையாளர்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது... அங்குள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் (H5N1) இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பண்ணையிலுள்ள கோழிகளை அழிக்கும் பணி ஆரம்பமாகியிருக்கிறது.. இருந்தாலும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோழிகளை இழந்துள்ள பண்ணையாளர்களுக்கு, இனிமேல் ஏற்படப்போகும் நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவது என்ற கேள்வியும் இங்கு கூடுதலாக முளைத்துள்ளது..!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த சில நாட்களாக கோழிகள் தொடர்ந்து உயிரிழந்தன. குறிப்பாக, கிருஷ்ணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியான்குப்பம் கிராமத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் அதிக அளவில் இறந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் அங்கு சென்று கோழிகளின் மாதிரிகளை சேகரித்தனர்.

Cuddalore Bird Flu H5N1 Outbreak Chicken Deaths

கடலூர் பறவைக் காய்ச்சல்

முதலில் இந்த மாதிரிகள், நாமக்கல்லிலுள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. ஆனால், கோழிகள் தொடர்ந்து கொத்து கொத்தாக செத்து மடிந்ததால், கூடுதல் மாதிரிகளும் எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டன. இதனிடையே, அதாவது நவம்பர் 13-ம் தேதி வரை சுமார் 35,647 பறவைகள் உயிரிழந்ததாக கால்நடைத் துறை அறிக்கை வெளியிட்டது.

எனவே, கடந்த நவம்பர் 5-ம் தேதி ஒரு கோழியின் மாதிரி போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு நேற்று நவம்பர் 13-ம் தேதி வெளியானது. இதில் H5N1 பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசின் தலைமை செயலருக்கும் தகவல் தெரிவித்துள்ளது.

15000 கோழிகள்

இப்போது பறவைக் காய்ச்சல் மற்ற பண்ணைகளுக்கும் பரவாமல் இருக்க அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியிருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பண்ணையில் உள்ள கோழிகளையும், அதை சுற்றியுள்ள ஒரு கி.மீ. பகுதிக்குள் இருக்கும் கோழிகளையும் அழிக்கும் பணியும் வேக வேகமாக நடக்கிறது..

அதைவிட முக்கியமாக, அழிக்கப்படும் கோழிகளை பாதுகாப்பான முறையில் குழிகளில் புதைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதுவரை மொத்தம் 1550 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அறிக்கை சொல்கிறது.. பாதிக்கப்பட்ட பண்ணைகளில் கிருமிநாசினி தெளிப்பதுடன், வாகனங்கள், உபகரணங்களும் சுத்தம் செய்யப்படுகின்றன.

கடலூர் - 16 மாதிரிகள்

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கடலூரில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசும், கால்நடை பராமரிப்புத் துறையும் அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை தொடங்கியுள்ளது. கட்டியாங்குப்பம் பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள கோழிகள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக புதைக்கப்படும். அத்துடன் அங்குள்ள கோழிப் பண்ணைகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாங்கள் கடலூர் மாவட்டத்திலிருந்து 16 மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அதில் 5 மாதிரிகளில் லேசான காய்ச்சல் உள்ளது. அதனால் அந்த பகுதிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். கோழிகள் உயிரிழப்பு தொடர்பாக முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசின் வழிகாட்டுதல்களின்படி பண்ணையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.

பண்ணையாளர்களுக்கு இழப்பீடு

உண்மையிலேயே, இந்த சம்பவத்தில் கோழிப் பண்ணையாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாட்களாக கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த கோழிகள் உயிரிழந்ததால் ஏற்கனவே அவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. இப்போது நோய் பரவாமல் தடுக்க எஞ்சியுள்ள கோழிகளையும் அழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டத்தையும் கணக்கெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.. இந்த கணக்கெடுப்புக்குப் பிறகு அரசின் விதிமுறைகளின்படி உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு தீவிரம்

கடலூரில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மற்ற கோழிப் பண்ணைகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்... அதேபோல, கோழிகள் வழக்கத்துக்கு மாறாக உயிரிழந்தால் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+