வேனில் மாம்பழத்துக்கு ஓட்டு கேட்ட அண்ணாமலை.. மோதிக்கொண்ட பாஜக - பாமக தொண்டர்கள்.. கடலூரில் பரபரப்பு!
கடலூர்: கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது பாஜக - பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கடலூர் லோக்சபா தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது தொகுதி தவிர, மற்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக அண்ணாமலை இன்று கடலூருக்கு வருகை தந்தார்.
கடலூரில் உள்ள முதுநகர் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அப்போது மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து பேசிய அண்ணாமலை, தங்கர் பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறிய 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்றும் பேசினார்.
அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை . ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.
இதனிடையே அண்ணாமலை பிரச்சாரத்திற்கு வருகை தந்திருந்த பாஜக மற்றும் பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், முண்டியடித்து அண்ணாமலையின் முன்பாக நிற்க முயற்சி செய்தனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நின்றிருந்த இரு தரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனைக் கண்ட போலீசார், உடனடியாக அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக நான்கு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பிரசாரக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications