வனஜா வாயை தொறந்தாங்க பாருங்க.. "அறைஞ்சிடுவேன்.. செருப்பால அடிப்பேன்" வைரலாகும் போலீஸார் சண்டை வீடியோ
ஆண் போலீஸை சரமாரி திட்டியுள்ளார் பண்ருட்டி பெண் போலீஸ்
கடலூர்: "உன் மனுவை விசாரிக்க முடியாது... என்னன்றே இப்போ.. இந்த புகாரை வாங்கிட்டு போயா... உன்னை அரெஸ்ட் பண்ணிடுவேன்.. அறைஞ்சிடுவேன்... செருப்பால அடிப்பேன்" என்று பெண் இன்ஸ்பெக்டர் வனஜா வாயில் வந்த வார்த்தைகள்தான் இவை.. இப்படி பேசியது ஒரு ஆண் சப்-இன்ஸ்பெக்டரை என்பதுதான் அதிர்ச்சியே!
Recommended Video
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபு... திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி சசிகலா. இவர், தன்னுடைய மாமியார் அல்லி, நாத்தனார் சுகந்தி ஆகியோர் சொத்து பிரச்சினை காரணமாக தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கடந்த 9-ந்தேதி பண்ருட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

மனு
இந்த மனுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா பெற்று கொண்டுள்ளார்.. ஆனால் இதை பற்றி உடனடியாக விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது.. அதனால், சசிகலா தனது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் இதை பற்றி சொல்லவும், பிரபுவும் இன்ஸ்பெக்டர் வனஜாவிடம் செல்போனில் பேசி உள்ளார். இதற்கு பிறகும், சசிகலாவிடம் வனஜா "உன் புருஷனுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு" என்று திட்டியிருக்கிறார்.

ஒருமை
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்திற்கே வந்துவிட்டார். என் மனைவி புகார் தந்தால் ஏன் அதை விசாரிக்கவில்லை என்று கேட்டார்.. இந்த வாக்குவாதம் முற்றியது.. வனஜாவும், பிரபுவும் வார்த்தை போர்களை தொடுத்தவாறே இருந்தனர்.. ஆரம்பத்தில் மரியாதையாக பேசி கொண்டிருந்தவர்கள் இறுதியில் ஒருமையில் திட்டி கொண்டார்கள்.

என்ன பேசுறீங்க?
இதில் முதலில் ஒருமையில் பேசியதும், தவறாக பேசியதும் வனஜாதான்.. "நீங்க என்ன பேசுறீங்க? யாருக்கிட்ட பேசிக்கிட்டிருக்கிற, இன்ஸ்பெக்டர் என்றால், எதுவென்றாலும் பேசுவியா? புகார் கொடுத்தால் விசாரிக்கணும். இல்லை என்றால் புகாரை திருப்பி குடுங்க.. குடுங்க" என்கிறார்.. அதற்கு இன்ஸ்பெக்டர் வனஜா, "முடியாதுய்யா.. உன் மனுவை விசாரிக்க முடியாது... புகாரை வாங்கிட்டு போயா... என ஆவேசமாக கூறியதுடன், உன்னை அரெஸ்ட் பண்ணி உள்ளே உட்கார வெச்சிடுவேன் என்று மிரட்டினார்.

வைரல் வீடியோ
ஒரு கட்டத்தில் அரைஞ்சிடுவேன், செருப்பால அடிப்பேன் என்றும் பிரபுவை சொல்கிறார்.. இவர்கள் இப்படி ஸ்டேஷனுக்குள்ளேயே தகராறு செய்து கொண்டதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்தனர்.. இந்த வீடியோ வைரலாகி காவல்துறை வட்டாரத்தில் மட்டுமல்ல.. தமிழக மக்களிடையேயும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.
இப்படி போலீஸ்காரர்களே அடித்துகொண்டால், ஒரு பிரச்சனைன்னு வந்தால் நாம எங்கே போறது!?
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications