கடலூர் மஞ்சக்குப்பத்தில் நாய்க்குட்டியை விழுங்கிய நாகப்பாம்பு .. லாவகமாக மீட்பு
கடலூர்: பாம்புகளின் இறை என்றால எலி, தவளை, பல்லி மற்றும் பறவை முட்டைகள் தான். இவற்றை தான் அதிகம் சாப்பிடும். எனினும் ஒரு நாகப்பாம்பு மிக நீளமாக ஐந்து அடி அல்லது ஆறு அடிக்கூட வளரக்கூடியது. எனவே அவை இரை தேடி செல்லும் போது , கிடைக்கும் சிறிய நாய்குட்டிகளை கூட வேட்டையாடி விழுங்கும். அப்படியான ஒரு சம்பவம் கடலூர் மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகரில் நடந்துள்ளது. நாய்க்குட்டியை விழுங்கிய நாகப்பாம்பு லாவகமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தின் வாசலில் புதர் அருகே பாம்பு ஒன்று இருப்பதை அப்பகுதியினர் கவனித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது, அந்த நாகப்பாம்பு நாய்க்குட்டி ஒன்றை விழுங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்வாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த சில மணி நேரங்களிலேயே சம்பவ இடத்திற்கு வந்த அவர், நாய்க்குட்டியை விழுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். சுமார் பல அடி நீளமுள்ள அந்த நாகப்பாம்பு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பின்னர், அந்த பாம்பை பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாகப்பாம்பு எப்படி வேட்டையாடும். பொதுவாக மலைப்பாம்பைப் போல நாகப்பாம்பு இரையை நெரித்துக் கொல்லாது. மாறாக, முதலில் தன்னுடைய விஷத்தை செலுத்தி நாய்க்குட்டியை இறக்கச் செய்யும். பின்னர் அதை வாயை பெரிய அளவில் திறந்து மெதுவாக உள்ளே தள்ளும். நாகப்பாம்பின் தாடை எலும்பு அமைப்புகள் நாய், எலி போன்றவற்றை விழுங்குவதற்காவே அகலமாக விரியும் தன்மை கொண்டதாகவே இருக்கும்.
எனவே சிறிய நாய்க்குட்டிகளை அசலாட்டாக நாகப்பாம்பு கடித்துவிழுங்கிவிடும். எனவே பாம்பு வருவதற் உண்டானவழிகளை அடைப்பதே சிறந்தது. பாம்புகள் பொதுவாக எலிகளை தேடி தான் வரும். எலி எங்கு உள்ளதோ, அங்கு பாம்பு கண்டிப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல தவளை இருந்தாலும் பாம்புகள் வரும். அப்படி வேட்டையாட வருவதை தடுக்க வேண்டும் என்றால், எலிகள் வருவதற்கு உண்டனா சூழலை நீங்கள் ஒழிக்க வேண்டும். சாப்பிட்ட உணவுகளை எறியக்கூடாது. புதர்களை அழிக்க வேண்டும். அப்படி செய்தாலே ஓரளவு தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications
