10 பெண் போலீசார் உட்பட 14 பேருக்கு கொரோனா- கடலூர் காவலர் பயிற்சி பள்ளி மூடல்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட 14 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவலர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது.
Recommended Video

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 394 ஆக உள்ளது. இவர்களுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்று பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேற்கொண்டு பாதிப்புகள் அதிகரித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் தேதி கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் போலீசாருக்கு அடிப்படை பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. இதில் 134 பெண் போலீசார் பயிற்சி பெற்று வந்தனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கடலூர் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 14 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. மேலும் பயிற்சியில் உள்ள 124 பெண்காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு யார் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று வந்துள்ளது என்பது தெரியாததால் கடலூரில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளரின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
-
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காவலர் செய்த தரமான சம்பவம் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications