ரூ. 20 லட்சம் ஹவாலா பணத்தை ஆட்டைய போட பார்த்த காவலர்கள்... சஸ்பெண்ட் செய்த எஸ்.பி!
Recommended Video

கடலூர்: வாகன சோதனையின் போது சிக்கிய ரூ. 20 லட்சம் ஹவாலா பணத்தை மறைக்க முயன்ற காவலர்கள் 3 பேரை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட பயணம் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் சாலை போக்குவரத்தானது அதிக அளவில் இருக்கிறது.

பேருந்து மற்றும் கார்களில் பயணம் செய்பவர்களிடம் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகளும் நடத்தி வருகின்றனர். பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா, மதுபானங்களை எடுத்துச் செல்கின்றனரா என்பன உள்ளிட்டவை இந்த வாகன தணிக்கையின் போது பார்க்கப்படுகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் வாகன சோதனைகள் நடந்து வரும்.
[10 காமாண்டோ படை, 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு... நடைதிறப்பால் பரபரப்பில் சபரிமலை!]
இதே போன்று நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது ரூ. 20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியுள்ளது. பறிமுதல் செய்த இந்தப் பணத்தை ஒப்படைக்காமல் காவர்கள் ரவிக்குமார், செல்வராஜ், அந்தோணி உள்ளிட்டோர் மறைத்துவிட்டு தாங்களே பங்கிட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயம் அம்பலமானதால் மாவட்ட எஸ்.பி 3 காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். போலீசிடம் சிக்கும் பணம் பாதி கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காது என்பார்கள் ஆனால் சுளையாக ரூ. 20 லட்சத்தை ஆட்டைய போட பார்த்திருக்கிறார்கள் இவர்கள்.












Click it and Unblock the Notifications