பழைய தங்கத்தை வாங்கி விற்கும் கடலூர் கடைக்குள்.. மூளைக்கார பெண் போலீஸ்.. கோமளா எடுத்த மாஸ்டர் பிளான்
கடலூர்: தீபாவளி சீட்டு வசூலித்து அப்பாவி மக்களின் 2 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், புதுக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது நினைவிருக்கலாம். ஆனால், இப்போது, தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்பவர்களை கண்டிக்கும் இடத்தில் இருக்கும் காவல்துறையை சேர்ந்தவர்களே, தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது தெரியுமா கடலூரில்?
கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் அனிதா.. இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், பண்ருட்டி பக்கிரிப்பாளையத்தை சேர்ந்த பிரபு (வயது 42) என்பவர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்திருந்தார். அவர் தீபாவளி சீட்டு நடத்தி, கடலூர் புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் வசூலித்தும் வந்தார்.
பழைய தங்க நகைகள்
ஆனால் சீட்டு முடிந்த பிறகு, பணம் கட்டியவர்களுக்கு தரவேண்டிய தங்ககாசு, பணம், பொருட்களை தரவில்லை. இதன் மூலம் சுமார் 270 பேரிடம் ரூ.33 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். பிறகு பணம் கட்டியவர்கள், அவரிடம் சென்று பணத்தை கேட்டபோது கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.
பிரபுவுக்கு உடந்தையாக அவரது மனைவியான ஆயுதப்படை போலீஸ்காரர் கோமளாவும் (39) செயல்பட்டார். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும் என்று அனிதா தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸார், இதுதொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போது விசாரணையில், பிரபு மோசடியில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, பிரபுவை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.
பிரபு மனைவி கோமளா
ஆனால், பிரபுவுக்கு உடந்தையாக இருந்ததே அவரது மனைவி கோமளாதான் என்பது தற்போது தெரியவந்ததையறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. காரணம், இந்த கோமளா, பெண் போலீஸாக பணிபுரிந்து வருபவராம்.
அதாவது, 42 வயதான பிரபு, தீபாவளி சீட் பண்ட் திட்டம் என்ற பெயரில் கடலூர் புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணம் வசூலித்துள்ளார்.
மூளையாக செயல்பட்ட பெண் போலீஸ்
இதில் 66 பேருக்கு மெச்சூரிட்டி பணம் ரூ.7.92 லட்சம், ஹேமா என்பவர் மூலம் பணம் கட்டிய 162 பேருக்கு ரூ.19.44 லட்சம், ரெட்டிச்சாவடி பூசாரிப்பாளையம் வனிதா என்பவர் மூலம் பணம் கட்டிய 42 பேருக்கு ரூ.1.80 லட்சம், வனிதாவிடம் கடனாக பெற்ற ரூ.4 லட்சம் என எந்த பணத்தையும் தராமல் அவர்களை ஏமாற்றியிருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டபோது கடையை மூடிவிட்டு சென்றுவிட்டாராம்.
இந்த ஆத்திரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பிரபு மீது புகார் தர சென்றபோதுதான், பிரபுவின் மனைவி ஆயுதப்படை காவலர் கோமளாவும் பணத்தை ஏமாற்றியது அம்பலமானது..
கோமளாவை சுற்றி வளைத்த போலீஸ்
39 வயதான கோமளாதான் இந்த மெகா மோசடிக்கு, கணவருக்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.. இதையடுத்து கோமளாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த விஷயம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோமளாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார்.
மொத்தம் 270 பேரிடம், ரூ 33 லட்சம் பெற்று மோசடி நடந்துள்ளதால், கைதான தம்பதியினரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸே மோசடியில் ஈடுபட்டு கைதாகி உள்ளது கடலூரில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது,












Click it and Unblock the Notifications