பீஸ்ட் பட ஸ்பெஷல் ஷோ டிக்கெட் கேட்டு கடலூரில் ரசிகர்கள் மறியல்.. போலீஸார் தடியடியால் பரபரப்பு
கடலூர்: பீஸ்ட் படத்திற்காக கடலூரில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக ரசிகர்களுக்கென சிறப்பு காட்சி ஒளிபரப்பப்படும். அந்த வகையில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கான டிக்கெட் எடுப்பதற்காக கடலூரை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சீனு தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் நேற்று காலை 11.30 மணி அளவில் அண்ணா பாலம் அருகில் உள்ள தியேட்டருக்கு சென்றனர்.

தியேட்டர் ஊழியர்கள்
அப்போது தியேட்டர் ஊழியர்கள், ரசிகர் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டை தற்போது கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் கடலூர் பாரதி சாலைக்கு திரண்டு வந்து சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போலீஸார்
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபடக் கூடாது, கலைந்து செல்லுமாறு கூறினர். எனினும் ரசிகர்கள் டிக்கெட் கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.

விஜய் ரசிகர்கள்
அப்போது போலீஸாருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ரசிகர்கள் தெறித்து ஓடினர். எனினும் சிலர் கலைந்து செல்ல மறுத்தனர்.

பதற்றமான சூழல்
இதையடுத்து அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் வெளியான ராம் முத்துராம் திரையரங்கில் விஜய் ரசிகர்கள் இருக்கைகளை துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம்












Click it and Unblock the Notifications