கடலூரில் வரம்புகளை உடைத்த அர்ச்சகர், திருநங்கை காதல் ஜோடி.. ரிசப்ஷனில் தெறிக்க விட்ட ஸ்நோ எஃபெக்ட்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சமூகத்தின் வழக்கமான வரையறைகளை தாண்டி அரங்கேறியுள்ள கடலூர் திருமணம், பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.. அத்துடன் ஆன்மீக பூமியில் ஒரு புதிய மாற்றத்திற்கான வித்தாகவும் இது அமைந்திருக்கிறது.. காதலுக்குக் கண் இல்லை என்பதை தாண்டி, தடைகளை உடைத்தெறியும் தைரியத்தை வெளிப்படுத்திய இவர்களின் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறந்துள்ள மங்களகரமான சூழ்நிலையில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் 110 திருமணங்கள் நடைபெற்றன..

Cuddalore Priest Transgender Couple Transgender Couple Reception Cuddalore Transgender Couple Snow Effect Reception

கடலூர் ஜோடி திருமணம்

ஆனால் இதில் அதிகம் ஈர்க்கப்பட்டது கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் நாகராஜன் மற்றும் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் திருநங்கை சஞ்சனா ஆகியோரின் காதல் திருமணம்தான்.

கடந்த 6 வருடங்களாகவே காதலித்து வந்த இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டுள்ளது.

அமர்க்களப்பட்ட ரிசப்ஷன்

திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவிற்கு செண்டை மேளம் மற்றும் மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு ஸ்பெஷல் வாகனத்தில் மணமக்கள் 2பேரும் உட்கார வைக்கப்பட்டு, மேளதாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த ஊர்வலத்தின்போது உடனிருந்த திருநங்கைகள் வாத்திய இசைக்கேற்ப டான்ஸ் ஆடி, தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

Cuddalore Priest Transgender Couple Transgender Couple Reception Cuddalore Transgender Couple Snow Effect Reception

குத்தாட்டம் போட்ட திருநங்கைகள்

வரவேற்பு நடைபெற்ற மேடை பகுதி கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், மேடையில் சிறப்பு வாய்ந்த ஸ்நோ எபெக்ட் போடப்பட்டிருந்தது, இந்நிகழ்வின் ஹைலைட்டாக அமைந்தது. மெல்லிய புகைமூட்டத்தின் நடுவே மணமக்கள் தகதகவென ஜொலித்தனர்.. இதேபோன்ற நவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளும் மேடையில் செய்யப்பட்டிருந்தன.

சாதி, மத மற்றும் சமூகத்தின் பல்வேறு தடைகளைத் தாண்டி, ஆறு வருட காதலுக்குப் புத்துயிர் கொடுத்துள்ள இந்தத் திருநங்கை - அர்ச்சகர் ஜோடியின் திருமணமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த வண்ணமயமான வரவேற்பு நிகழ்ச்சியும் தற்போது அப்பகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாகவும், பலருக்கும் ஒரு முன்மாதிரியாகவும் மாறியுள்ளது

வரம்புகள் உடைத்தெறிந்து.. சபாஷ்

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பல திருமணங்கள் நடந்தாலும், அர்ச்சகரான நாகராஜன், திருநங்கை சஞ்சனாவுக்கு திருமண வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அதுமட்டுமல்ல, பொதுவான வரம்புகளை உடைத்தெறிந்துள்ளது இந்த ஜோடி.. சாதி, மத எல்லைகளைத் தாண்டி, சமுதாயத்தில் திருநங்கைகள் குறித்த வழக்கமான பார்வையை மாற்றி, இவர்களின் உண்மையான காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதித்து திருமணம் செய்து வைத்ததே சோஷியல் மீடியாவிலும் வைரலாகி இந்தளவிற்கு பெரிதாக பேசப்படுவதற்கு முக்கியக் காரணமாகும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+