கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு ஹேப்பி பர்த்டே.. வீட்ல பிரிட்ஜ் இல்லை கேக் கெட்டு போய்டும்.. வகுப்புக்கு செல்ல மறுத்த சிறுவன்

Google Oneindia Tamil News

கடலூர்: எனக்கு இன்று பிறந்தநாள், எங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லை, கேக் கெட்டு போய்விடும் என பள்ளியில் வகுப்புக்கு செல்ல மறுத்த சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    எனக்கு ஹேப்பி பர்த்டே.. வீட்ல பிரிட்ஜ் இல்லை கேக் கெட்டு போய்டும்.. வகுப்புக்கு செல்ல மறுத்த சிறுவன்

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதிகளில் பள்ளி தொடங்கிய முதல் நாளில் மாணவச் செல்வங்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு சென்ற நிலையில் அரசு உதவி பெறும் குருகுலம் பள்ளியில் மழலை ஒருவரின் மழலைப் மொழி பேச்சுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்த நிலையில் பள்ளியின் வளாகத்தில் உட்கார்ந்து அடம் பிடித்த அந்த சிறுவன், "எனக்கு இன்னைக்கு பிறந்தநாள், வீட்ல கேக் இருக்கு கேக் வீணாகிவிடும், எங்க வீட்ல என்னை விட்டுவிட்டு எல்லாம் காலி பண்ணிடுவாங்க.

    ஆஹா.. பள்ளி மாணவர்களோடு மாணவர்களாக பெஞ்சில் அமர்ந்துள்ளது யாரு பாருங்க.. நம்ம முதல்வர்! ஆஹா.. பள்ளி மாணவர்களோடு மாணவர்களாக பெஞ்சில் அமர்ந்துள்ளது யாரு பாருங்க.. நம்ம முதல்வர்!

     வீட்ல பிரிட்ஜ்

    வீட்ல பிரிட்ஜ்

    வீட்ல பிரிட்ஜ் இல்லை. எடுத்து வைக்க முடியாது. நான் கிளாஸுக்கு போக மாட்டேன் என கூறிய நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
    வீட்டுக்கு போனால் அம்மா திட்டுவார்கள் என சக பெற்றோர்கள் கூறிய நிலையில் அதற்கு அந்த சிறுவன் "நான் பொய் சொல்லுவேன்.

    பொய் சொல்லுவேன்

    பொய் சொல்லுவேன்

    நான் படித்து விட்டேன். அ னா ஆ வனா, ABCD படிச்சிட்டேன்னு சொல்லி பொய் மாத்திடுவேன் என கூறியாதால் சிரிப்பொலி எழுந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றுதான் தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டன.

    சிரித்த மாணவர்கள்

    சிரித்த மாணவர்கள்

    நிறைய பள்ளிகளில் குழந்தைகள் அழுகை சப்தம் இருந்தது. இந்த நிலையில் இந்த சிறுவனோ பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் , கேக் தீர்ந்து விடும் என்பதை காரணம் காட்டி தன்னை வீட்டுக்கு அனுப்ப சொன்ன காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனை பார்த்து நிறைய பெற்றோரும், பெரிய வகுப்பு மாணவர்களும் சிரித்தனர்.

     வகுப்பறை

    வகுப்பறை

    இன்னும் சிலரோ நாமெல்லாம் இந்த வயசில் இத்தனை விவரமாக இல்லையே , இந்த காலத்து பசங்களுக்கு எத்தனை விவரம் ? என பேசிக் கொண்டனர். ஒரு வழியாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் அந்த மாணவனை சமாதானப்படுத்தியதால் வகுப்பறைக்கு சென்றான்.

    English summary
    Cuddalore School student cries in school as his birthday cake will be eaten by his family members.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X