கடலூரில் ஆதரவின்றி குடிசையில் வசித்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியைக்கு வீடு கட்டிக்கொடுத்த மாணவர்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கவரப்பாளையத்தை சேர்ந்த சந்திரா என்பவர் 1980கள் தொடங்கி 90கள் வரை தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது 75 வயதாகும் சந்திரா வறுமையில் தவித்தார். குடிசையில் ஆதரவு இன்றி வசித்த அவருக்கு அவரிடம் படித்த மாணவர்கள் புதிதாக வீடு ஒன்றை கட்டி தந்துள்ளனர். குடிசை வீடு இருந்த இடத்தில் புதிதாக கான்க்ரீட் வீடு அமைக்கப்பட்டுள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் வழக்கம். ஆனால் இதில் ஆசிரியர் பணி மிக முக்கியமானது. அவர்கள் தான் பலருக்கு அறியாமை என்ற இருளை நீக்கி, கல்வியை போதிப்பவர்கள். அவர்கள் கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள். பள்ளி ஆசிரியர்கள் பலர் அந்த காலத்தில் செய்த பணிகள் அளப்பரியது. அவர்கள் செய்த அற்புதமான பணியால் இன்று ஏழை மாணவர்கள் பலர், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல ஏழைகள் கல்வியில், பொருளாதாரத்தில் இன்று சிறந்து விளங்க பள்ளி ஆசிரியர்களே காரணம்.

குறிப்பாக அந்த காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் பலர் தங்களது சொந்த பணத்தையும் போட்டு வறுமையில் உள்ள மாணவர்கள் படிக்க உதவினார்கள். ஆனால் அப்படி உதவிய ஆசிரியர்கள் தற்போது வறுமையில் தான் இருக்கிறார்கள். இப்போது வேண்டுமானாலும் ஆசிரியர்கள் சம்பளம் ஓரளவு கணிசமாக மாறி இருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆசிரியர்கள் சம்பளம் மாறவில்லை. கடலூரில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கவரப்பாளையத்தை சேர்ந்த 75 வயதாகும் சந்திரா வனகிரி பெருமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1981-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றார். இருப்பினும் அவர், ஆதரவின்றி தனியாக ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த அவரிடம் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள், புதிய வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் ஒன்றாக கூடி பேசி ரூ.3.5 லட்சம் வசூலித்தனர். இதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியைக்கு அவர் வசித்து வந்த குடிசை வீட்டை இடித்து விட்டு புதிதாக கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்தார்கள். அதற்கான சாவியை பெற்ற சந்திரா, நெகிழ்ச்சி அடைந்தார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சந்திரா திருமணமாகி 5 ஆண்டுகளில் அவரது கணவர் இயற்கை எய்தி விட்டார். வாரிசுகளும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனால் ஆதரவற்றி தவித்த அவருக்கு தற்போது முன்னாள் மாணவர்கள் புதிய வீடு கட்டி புது நம்பிக்கையை அளித்து, அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள். தனக்கு முன்னாள் மாணவர்கள் வீடு கட்டி கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ள சந்திரா, தன்னை போல் இருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications