Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே கேட் திறந்தே இருந்தது.. ரயில் சத்தமும் கேட்கவில்லை.. காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, ரயில்வே கேட் மூடப்படவில்லை.. அது திறந்தே இருந்தது என்றும், ரயில்வே கேட் கீப்பர் அவரது அறையிலேயே அமர்ந்திருந்ததாக கூறி இருக்கிறார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பள்ளி வாகன ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி சாருமதி, மாணவர் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சாருமதியின் சகோதரர் செழியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Cuddalore Train Accident Injured Student Claims Railway Gate Was Open

3 மாணவர்கள் உயிரிழப்பு

இதனால் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. இந்த ரயில் விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் ரயில்வே கேட்டை மூடாமல், தூங்கி கொண்டிருந்ததாக கூறி வருகின்றனர். ஆனால் தெற்கு ரயில்வே தரப்பில், பள்ளி வாகன ஓட்டுநர் கேட்டதால், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்ததாக கூறப்பட்டுள்ளது.

முரணாக சொல்லும் ரயில்வே நிர்வாகம்

இந்த ரயில் விபத்தை நேரில் பார்த்தவர் உட்பட பொதுமக்கள் அனைவரும் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்றும், அவரின் ரயில்வே கேட்டை மூடவில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் ரயில்வே நிர்வாகம் தொடர்ச்சியாக, ரயில்வே கேட் காலை 7.05 மணிக்கு மூடப்பட்டுவிட்டது. ஆனால் பொதுமக்கள் கேட்டதால், பங்கஜ் சர்மா கேட்டை திறந்திருக்கிறார் என்றே கூறி வருகிறது.

மாணவர் விஸ்வேஷ் பேட்டி

இந்த நிலையில் ரயில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவர் விஸ்வேஷ் மற்றும் பள்ளி வேன் ஓட்டுநர் ஆகியோர் முக்கிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதன்படி விஸ்வேஷ் பேசுகையில், விபத்து நடந்த போது காலை 7.30 மணி இருக்கும்.. ரயில்வே கேட் போடப்படவில்லை.. திறந்தே தான் இருந்தது. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. சில நேரம் நாங்கள் வருவதற்கு முன்பாக ரயில் கடந்திருக்கும்.

ரயில்வே கேட் திறந்திருந்தது

அதனால் பள்ளி வேன் ஓட்டுநர் வழக்கம் போல் சென்றார். திடீரென ரயில் மோதி விபத்து நடந்துவிட்டது. விபத்து நடந்த போது எனக்கு மயக்கம் எதுவும் வரவில்லை. அப்போது பார்த்த போது, ரயில்வே கேட் கீப்பர் அவரது அறையிலேயே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பள்ளி வேன் ஓட்டுநர் பேசும் போது, ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.. ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரே குரலில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டோர்

ரயில் விபத்தை பார்த்த பொதுமக்கள், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர், தனியார் பள்ளி ஓட்டுநர் உட்பட அனைவரும் ஒரே குரலில் கேட் மூடப்படவில்லை என்று கூறி வருகின்றனர். ஆனாலும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கேட்டதால், கேட் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+