Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் தூண்டிலில் சிக்காதீங்க.. விருதுநகரில் நடந்தது தெரியுமா.. விஜய்க்கு விஜயபிரபாகரன் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சியின் தூண்டிலில் சிக்கக் கூடாது என்று தேமுதிக மாநாட்டில் விஜயபிரபாகரன் அட்வைஸ் கொடுத்துள்ளார். தவெகவுடன் கூட்டணிக்கு வருவது போல் வந்து காங்கிரஸ் கட்சி பேரத்தை அதிகரித்து திமுகவிடம் சென்றுவிடும் என்றும் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், ஜனநாயகன் திரைப்படம் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதியே சென்சார் சான்றிதழுக்காக தயாரிப்பு நிறுவனம் தட்கல் முறையில் விண்ணப்பித்தும், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படவில்லை.

DMDK Alliance Vijayaprabhakaran Premalatha vijayakanth

இதனால் விஜய் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். அதேபோல் ஜனநாயகன் ஒத்தி வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் பாஜகவே காரணம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் தேமுதிக 2.0 மாநாடு நடந்து வருகிறது. பாசாரில் நடக்கும் மாநாட்டில் தேமுதிகவின் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் தவெக தலைவர் விஜய்க்கு ஒரு சிறிய அட்வைஸை கொடுத்துள்ளார். அதில் விஜயபிரபாகரன் பேசுகையில், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பிரச்சனை சென்று கொண்டு இருக்கிறது. அரசியலில் உங்களுக்கு நான் சீனியர்.. இதனை நீங்கள்தான் கூறினீர்கள். அந்த வகையில் ஒரு சிறிய அட்வைஸ்.

காங்கிரஸ் கட்சி அவர்களின் கூட்டணி பேரத்தை அதிகரிப்பதற்காக உங்களை ஆதரிக்கிறது. அந்த ஆதரவை நம்பிவிடாதீர்கள். மீனுக்கு தூண்டில் போடுவது போல் போடுகிறார்கள். ஏனென்றால் விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்களை நம்பிவிடாதீரகள்.. கூட்டணிக்கு வருவதை போல் வந்து, உங்களை உசுப்பேற்றிவிட்டு, அவர்கள் அங்கேயே தான் இருப்பார்கள்.

இந்த அட்வைஸை பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் உங்களின் நல்லதுக்கு சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை விஜய பிரபாகரன் கடுமையாக விமர்சித்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேமுதிக பாஜக கூட்டணியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+