என் பொண்டாட்டி எஸ்.ஐ... நம்பி ஏமாந்த ராஜதுரை.. வாடகைக்கு டிரஸ் எடுத்து ஊரை ஏமாற்றிய சூரிய பிரியா!
சப்-இன்ஸ்பெக்டர் போல வேடமிட்டு பெண் போலீசில் சிக்கியது எப்படி?
கடலூர்: துணை நடிகை சூர்யபிரியா, ஷூட்டிங்கில் பயன்படுத்தும் போலீஸ் யூனிபார்மை 1500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, கில்லாடித்தனமான வேலைகளை பல செய்து வந்தது அம்பலமாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன், இதர போலீசாருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சக்கரபாணி என்பவர் தாறுமாறாக பைக்கில் வரவும் அவரை விசாரித்தனர்.
அவரிடம் லைசென்ஸ், இன்சூரன்ஸ் எதுவுமே இல்லை.. குடிபோதைவேறு.. அதனால்தான் கேஸ் புக் செய்து ஸ்டேஷனுக்கு கூட்டி வந்திருக்கிறார்கள்.

சக்கரபாணி
பிறகுதான் காக்கி யூனிபார்மில் சூர்யபிரியா ஸ்டேஷனுக்கு வந்தார். எஸ்ஐ பாஸ்கர் அப்போது பணியில் இருந்தார். சென்னையில் எஸ்ஐயாக இருக்கிறேன்.. சக்கரபாணியை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார். ஆனால், சூர்யபிரியாவை பார்த்தவுடனேயே போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

விசாரணை
போலீசுக்கான உயரமே இல்லாமல் குட்டையாக இருந்திருக்கிறார்.. யூனிபார்மில் ஸ்டார்கூட சரியாக குத்தாமல் வந்து நின்றிருக்கிறார். இதற்கு பிறகு துருவி துருவி விசாரிக்கவும்தான் மொத்தமாக மாட்டிக் கொண்டுள்ளார் சூர்யபிரியா.

ராஜதுரை
விஏஓவிடம் போய், போலீஸ் என்று சொல்லி கணவனுக்கு வருவாய் சான்றிதழையே ஏமாற்றி வாங்கி உள்ளார் இவர். இப்படி பல தில்லாலங்கடி வேலையில் சூரியபிரியா ஈடுபட்டு வந்துள்ளர். கணவன் ராஜதுரை ரோட்டோரம் பழம் விற்பவராம். ஒருநாள் நடுரோட்டில் கடையை போடவும் ஒருநாள் புவனகிரி போலீஸ் பிடித்து கொண்டு செல்ல, ஸ்டேஷனுக்கு இதேபோல யூனிபார்மில் சென்று ராஜதுரையை விடுவிக்குமாறு சொல்லி உள்ளார். அதன்படியே போலீசாரும் நம்பி விடுவித்து இருக்கிறார்கள்.

மனைவி
இதுவாவது பரவாயில்லை.. ராஜதுரையையே எஸ்ஐ என்று சொல்லிதான் ஏமாற்றி கல்யாணம் செய்துள்ளாராம் சூரியபிரியா. கல்யாணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகிறதாம்.. இதுவரைக்கும் மனைவி எஸ்ஐ என்றே பழக்கடை ராஜதுரை நம்பி ஏமாந்து இருக்கிறார்.

பழக்கடை
காலையில் எழுந்ததும் யூனிபார்ம் போட்டுக் கொண்டு டியூட்டிக்கு போகிறேன் என்று கிளம்பி விடுவாராம். தினமும் சிதம்பரம் பஸ் ஸ்டேண்டில் திருப்பாதிரிபுலியூருக்கு பஸ் ஏற்றி விடுவதோடு சரி.. மனைவி எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்றே தெரியாது என்கிறார் போலீசாரிடம்! ஆனால் ராஜதுரைக்கும் இதில் உடந்தை என்றும் இன்னொரு பக்கம் சந்தேகம் வலுக்கிறது.

துணை நடிகை
ஆரம்பத்தில் சூரியகலா சென்னையில் ஒரு கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போதுதான், அந்த கடைக்கு வந்த சில துணை நடிகைகள் பழக்கமாகி உள்ளனர். அவர்களின் உதவியுடன் சூர்யபிரியா சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால் வருமானம் போதவில்லை. அதனால் 3 தோழிகளுடன் சேர்ந்து ஏமாற்றும் வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

வாடகை யூனிபார்ம்
இந்த சமயத்தில்தான் சினிமா ஷூட்டிங்குக்கு பயன்படுத்தப்படும் போலீஸ் யூனிபார்மை 1500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் சிதம்பரத்துக்கே வந்தாராம். அதை அணிந்துதான் ஏமாற்று வேலையிலும் இறங்கி உள்ளார். இப்போது அந்த தோழிகள் யார், உண்மையிலேயே ராஜதுரைக்கு இதில் தொடர்பு உள்ளதா, வேறு என்னென்ன ஏற்று வேலைகளில் இதுவரை சூரியபிரியா ஈடுபட்டார் என்ற விசாரணை நடந்து வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications