கள்ளக்குறிச்சி மாணவி இறுதிச்சடங்கு.. சொந்த ஊரில் போலீஸ் குவிப்பு - வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு
மாணவியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் நடைபெற உள்ளது - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
கடலூர்: பள்ளி மாணவியின் இறுதிச்சடங்கு நடைபெறும் பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நடைபெற உள்ள மாணவியின் வீடு மற்றும் சுடுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களும், உள்ளூர் மக்களும் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் காரணமாக கடந்த 17 ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதனிடையே இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று காலை நடந்த விசாரணையின்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன், பெற்றோர் மீது இந்த நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஆனால் மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என நீதிபதி காட்டமாக பேசினார். இதையடுத்து பெற்றோர் தரப்பு, தங்களுக்கு மறுஉடற்கூராய்வில் திருப்தி இல்லை. இரு உடற்கூராய்வு வீடியோக்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ஜிப்பர் மருத்துவமனை
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி, இரு உடற்கூராய்வு அறிக்கைகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன். கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். உங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமூகவலைதளங்கள் பொய் செய்தியை பரப்பி உள்ளன. நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால் காவல் துறை சட்டபடி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் உடலை அவரது உடலைப் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது.

போலீஸ் குவிப்பு
இந்த நிலையில் பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நடைபெற உள்ள மாணவியின் வீடு மற்றும் சுடுகாடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இறுதிச் சடங்கில் வெளியூர் நபர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதி
நேற்று இரவு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் இறுதிச் சடங்கில் வெளி நபர்களோ வெளியூரை சேர்ந்தவர்களோ வேறு ஏதேனும் அமைப்பை சேர்ந்தவர்களோ கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும் உறவினர்கள் மட்டும் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி என தெரிவித்தனர். அதே போன்று இறுதி சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம். தேவையற்ற இடங்களில் கூட்டம் கூடக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறுதிச்சடங்கு
உள்ளூர் மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு மாணவியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்புகளையும் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications