வாக்கிங் போன மனுஷனுக்கு வந்த சோதனை! கால் இடறி கீழே விழுந்த கே.எஸ்.அழகிரி! நெற்றி, முழங்காலில் காயம்!
கடலூர்: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி நடைபயிற்சிக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக கால் இடறி தலைகுப்புற விழுந்ததில் அவரது நெற்றி மற்றும் முழங்காலில் பலத்த அடிபட்டுள்ளது.
வாக்கிங் போன மனுஷனுக்கு இதென்னடா சோதனை என காங்கிரஸ் கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் மறைந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக நேற்றே கடலூர் மாவட்டம் சிதம்பரம் சென்றுவிட்ட கே.எஸ்.அழகிரி, அங்கிருக்கும் கீரப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். இன்று காலை தனது கீரப்பாளையம் இல்லத்திலிருந்து வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொள்ளச் சென்றார் கே.எஸ்.அழகிரி. அப்போது கல் தடுக்கியதா அல்லது காலணி தடுக்கியதா எனத் தெரியவில்லை, எதிர்பாராதவிதமாக கால் இடறி தலைகுப்புற விழுந்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
இதில் அவரது முழங்கால் மற்றும் நெற்றியில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. இதையடுத்து அவருடன் சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டிரெஸ்ஸிங் செய்து முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து முழங்காலில் கடும் வலி ஏற்பட்டதால் இன்று நாள் முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கே.எஸ்.அழகிரிக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இன்னும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், வீட்டில் ஓய்வெடுப்பதாக கூறி மருந்துகளை வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் ஆனார் அழகிரி.
தற்போது கடலூர் கீரப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இதனால் இன்று மாலை நடைபெறவிருந்த இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் கே.எஸ்.அழகிரி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications