கருப்பு ஆட்டை புடிக்கணும்…. எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைக்கும் ஹெச். ராஜா… விஷயம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எடப்பாடி பழனிசாமிக்கு ஹெச். ராஜா கோரிக்கை-வீடியோ

    கடலூர்:காவல்துறையில் கருப்பு ஆடுகள் நிறைய உள்ளன... அதை கண்டு பிடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் மாற்று மதம் பற்றி கருத்து தெரிவித்ததாக எழுந்த புகாரின் பேரில், பாஜக பிரமுகரான கல்யாணராமன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Lot of black sheeps in the police department says bip national secretary h. raja said

    முன்னதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கல்யாணராமன் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை சந்திப்பதற்காக வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: கல்யாணராமன் கைது செய்தது எந்தவிதத்தில் சரி என்று தெரியவில்லை. இந்த நாட்டில் தேசியவாதி என்றால் கருத்துரிமை மறுக்கப்படுமா?

    கல்யாணராமனின் தலைக்கு 5 லட்ச ரூபாய் நிர்ணயத்தவர் யார்? அரசுக்கு எப்படி தெரிந்தது? ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

    இந்து மதத்தையும் பாரத மாதா மற்றும்பிரதமரை இழிவுபடுத்திய லயோலா கல்லூரி முதல்வர் மற்றும் ஓவியர் அகிலன் ஆகியோரை ஏன் கைது செய்ய வில்லை? ஐஏஎஸ் சகாயம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    காவல்துறையில் கருப்பு ஆடுகள் இல்லை என்றால் இவர்களை ஏன் கைது செய்யவில்லை? அவர்களைக் கண்டு பிடித்து தமிழக முதல்வர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+