திருக்கை மீன் 1 டன் எடையில் கடலூர் கடலில் சிக்கியதுமே.. ராட்சத மீனை கிட்டப் பார்த்தால் ஒரே ஆச்சரியம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சிறு படகுகள் மற்றும் வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்களை பிடித்து வருகிறார்கள்.. ஒவ்வொரு வலையிலும் சில நேரங்களில் அரிய வகை மீன்கள் சிக்குவதால் வியப்பு ஏற்பட்டுவிடும்.. அந்தவகையில் இப்போதும் ஒரு ஆச்சரிய சம்பவம் கடலூர் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலும், தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது, வித்தியாசமான மீன்கள் அவர்களது வலையில் சிக்குவது வழக்கமாகும்.. சிலசமயம் அரிய வகை மீன்கள் வலையில் சிக்கிவிடக்கூடும்.. சிலசமயம், மருத்துவ குணம் வாய்ந்த அரிய மீன்களும் வலையில் சிக்கிவிடக்கூடும்

திருக்கை மீன்கள்
இப்படி சிக்கும் மீன்களை கரைக்கு கொண்டு வரும் மீனவர்கள், ஏலம் போட்டு விற்பனை செய்வார்கள்.. சிலசமயம், கூடுதல் விலைக்கு பங்கு போட்டு விற்றுவிடுவார்கள்.
சமீபத்தில்கூட இலங்கை அம்பாறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் வலையை வீசியபோது, அதிக எடையாக இருந்துள்ளது.. இதனால் மீனவர்கள் வலைக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது ராட்சத திருக்கை மீன் சிக்கியதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்..
அந்த திருக்கை மீன் 1000 கிலோவுக்கு மேல் அதிக எடை கொண்டதாக இருந்ததாம்.. இதனால், அனைத்து மீனவர்களும் சேர்ந்து போராடி, அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தனர். இந்த திருக்கையை வேடிக்கை பார்க்க அந்த பகுதி மக்களே ஒன்று திரண்டு விட்டார்கள்..
கடலூரில் திருக்கை மீன்
இப்போதும் அப்படியொரு சம்பவம் நம்ம கடலூரில் நடந்துள்ளது.. கடலூர் மீனவர்கள் வரக்கூடிய நேற்று கடலுக்கு சென்றுள்ளார்கள்.. கடலில் வலையில் வீசியபோது, 1 டன் எடை கொண்ட ராட்சதத் திருக்கை மீன் சிக்கியிருக்கிறது..
மீனவர்கள் இதை ஒன்றுகூடி கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பிறகு கிரேன் மூலம் படகிலிருந்து இறக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.. 1 டன் எடை கொண்ட திருக்கை மீன் கிடைப்பது அபூர்வமான விஷயம் என்பதால், அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் மீனை பார்த்தனர்..
1 டன் எடை கொண்ட ராட்சத திருக்கை
திருக்கை என்றாலே, அது தாய்மார்களின் உணவு என்பார்கள்.. பாலூட்டும் தாய்மார்கள், இந்த மீனை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரக்கும்.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் மிக குறைவாகவும், மிக ஆரோக்கியமான நல்ல கொழுப்பு ஒமேகா 3 அதிகமாகவும் இந்த மீனில் உள்ளதால், மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு..
வயதாகும்போது பார்வைத்திறனும் மேம்படும்.. குழந்தை பெற்ற பெண்கள் அதிக பால் சுரப்பிற்காக சாப்பிட வேண்டிய திருக்கை மீன்களுக்கு நல்ல கிராக்கி எப்போதுமே உள்ளது.. இதன் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், உடல் பலவீனங்கள் குறைய உதவும்.
மொத்தத்தில், கடலூர் வலையில் பிடிபட்ட இந்த ராட்சதத் திருக்கை மீன், அதன் அதிக எடை, rarity காரணமாக இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications