பிளாக் டிக்கெட்டு! அப்பா அம்மா கூடவே இல்லாதவர்! விஜய்க்கு எம்ஆர்கே பன்னீர் செல்வம் மறைமுக விமர்சனம்
கடலூர்: பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு எல்லாம் முதல்வர் பதவிக்கு ஆசையா என்றும் குடும்பத்தில் பெற்றோருடன் இல்லாதவர் எப்படி இளைஞர்களை வழி நடத்துவார் என்றும் மிகவும் கடுமையான விமர்சனத்தை தவெக தலைவரும் நடிகருமான விஜய் மீது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மறைமுகமாகவும் அநாகரீகமாகவும் முன் வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி, நிதி நிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரை புறக்கணித்தது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டம் திருமுட்டத்தில் அறிஞர் அண்ணா திடல் கலைஞர் அரங்கத்தில் பாஜகவை கண்டித்து திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,. நேற்று மழையில் முளைத்த காளான் சொல்றாரு! என்னாது இனிமே ஏமாற மாட்டாங்களாம். நீங்கள் சினிமாகாரர், முதல்வர் ஆகுறது சாதாரணமா? 50 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு உழைத்து பல்வேறு தடைகளை தாண்டி நாம் ஆட்சியை பிடித்துள்ளோம்.
பிளாக் டிக்கெட்
பிளாக் டிக்கெட் விற்றவங்கலாம் பேசுறாங்க! அவர் வாங்கும் சம்பளமே பிளாக்கில் தான் வாங்குகிறார். ஒயிட்டில் வாங்காதவர், ஆட்சிக்கு வந்து அமர போகிறாராம். அம்மா, அப்பா கூடவே ஒற்றுமையா இல்லை. இளைஞர்களை எப்படி வழிநடத்துவார்.
ஆட்சியை பிடிக்க
ஆட்சியை பிடிக்க போறாங்களாம், முதல்வராக போறாங்களாம், இதென்ன சினிமாவா? இளைஞர்களை கொள்கை பிடிப்புள்ளவர்களாக உருவாக்கியதே திமுகதான். நாங்கள் தடம் மாறாமல் எங்கள் உடலில் கருப்பு சிகப்பு ரத்தம் ஓடுது.
கலாச்சார சீர்கேடு
இளைஞர்களின் கலாச்சாரத்தையே வீணாக்கும் நடிகன், ஆட்சியை பிடிக்க போறாராம். இளைஞர்களை திருத்த போறாராம். நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு போராட்டம் நடத்தவில்லை, 10 கட்சி துண்டை போட்டுகிட்டார். எல்லாம் சினிமா செட்டிங் என பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிலும் விஜய்யை ஒருமையில் விமர்சித்திருந்தார்.
விஜய் பேசியது என்ன
கோவையில் தவெக பூத் கமிட்டி பயிற்சி கருத்தரங்கில் விஜய் பேசுகையில், அப்போது அந்த மாநாட்டில் விஜய் பேசுகையில், பூத் கமிட்டி பயிற்சி பட்டறை என்ற பெயர்தான் இருக்கிறது. ஆனால் பார்ப்பதற்கு வேறு ஒரு விழா போல் இருக்கிறது. இது ஓட்டுக்கான மீட்டு கிடையாது. என்னடா இது இவர் இப்படி சொல்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.
தேர்தல் அரசியல்
தேர்தல் அரசியலில் இருக்கிறோம். ஆனால் ஓட்டுக்காக மட்டும் கிடையாது. ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்ய போகிறோம். இதுவரை செய்த மாதிரி நாம் செய்ய போவதில்லை. மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். அதுதான் தேர்தல். இந்த பூத் பயிற்சி பட்டறையில் மக்களிடம் எப்படி ஓட்டு வங்குவது என்பதில்லை, மக்களுடன் மக்களாக ஒன்றிணைய போகிறோம்.
ஆட்சியை பிடிப்போம்
இந்த கோவைக்கு நிறைய பேர் வந்திருக்கலாம், பேசியிருக்கலாம், பொய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கலாம். இதையெல்லாம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம். பழைய கதை. அதுக்கு நான் இங்கு வரலை. இனி அது நடக்காது, நடக்க விட போவதும் கிடையாது. இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
நாகரீகம் எங்கே
விஜய்க்கு பதிலடியாக எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியிருந்தார். அரசியல் என்றால் விமர்சனங்களை செய்யலாம். ஆனால் அதிலும் ஒரு நாகரீகம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பது ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகல்ல என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications