அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகனுக்கு தேடி வந்த முக்கியப் பதவி! களைகட்டும் கடலூர் மாவட்ட திமுக
கடலூர்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்து வந்த கதிரவன் எடுத்த எடுப்பிலேயே நேரடியாக மாவட்ட பொருளாளர் ஆக்கப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வரவு செலவு கணக்கு பார்த்தவர் கதிரவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மகன்
வேளாண்மைத் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வந்த நிலையில், இப்போது நேரடி அரசியலில் இறங்கியிருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டும் இருந்து வந்த கதிரவன் இப்போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவின் பொருளாளராக உயர்ந்துள்ளார்.

கணக்கு வழக்கு
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தேர்தல் செலவு உட்பட கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வரவு செலவு கணக்கு பார்த்தவர் கதிரவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தனது மகன் கதிரை பொருளாளராக ஆக்கி தனது பக்கத்தில் வைத்துக் கொண்டார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். கதிரவனை இளம் வேங்கை என அவரது ஆதரவாளர்கள் அடைமொழியிட்டு அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

நிதானம் -பொறுமை
தனது தந்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை போல் இல்லாமல் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கக் கூடியவர் கதிரவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முன் கோபம் இல்லாமல் அணுசரனையாக கட்சிக்காரர்களிடம் இவர் நடந்துக்கொள்வதால் இவரது பொருளாளர் பதவிக்கு பெரியளவில் போட்டி இல்லாமல் இருந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் தான் கடலூர் திமுக வேட்பாளர் என இப்போதே அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.

அமைச்சர்கள் வாரிசு
இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மனோ தங்கராஜ் மகன்களுக்கு திமுக செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அமைச்சர் கீதா ஜீவனின் தம்பி ஜெகன் பெரியசாமிக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சீனியர் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் தங்கள் வாரிசுகளுக்கு எந்தப் பதவியையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications