தைலாபுரத்தில் யாரிதை செய்தது? பாமக ராமதாஸ் வீட்டிலேயே ஒட்டு கேட்கும் கருவி? டிடெக்டிவ் ஏஜென்ஸி சோதனை
கடலூர்: தன்னுடைய வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது. அதுவும் நான் உட்காரும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு, பாமகவையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலேயே அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது... இதையடுத்து, தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்ட விவகாரம் குறித்து, இன்று தனியார் துப்பறியும் ஏஜென்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக, சமீப காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், நேற்று கும்பகோணத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பிறகு, பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னுடைய வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது. அதுவும் நான் உட்காரும் இடத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி என்னுடைய வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை யார் வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள்? என்று விசாரித்து வருகிறோம்" என்று கூறியிருந்தார்,.
பரபரத்த புகார்கள்
ஏற்கனவே, பாமகவின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், , இப்படியொரு பகீர் குற்றச்சாட்டு, பாமகவுக்குள் மேலும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டுபண்ணிவிட்டது.
இந்த ஒட்டு கேட்கும் கருவியானது, ராமதாஸ் வீட்டில், 2 நாட்களுக்கு முன்பு பொருத்தியிருந்ததாம்.. சென்னையிலுள்ள தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, ராமதாசிடமே இதனை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
மீண்டும் ஆய்வு
அதாவது, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கட்சி தொடர்பான அவசர முடிவுகள் எடுக்கும்போது, அதை உடனுக்குடன், கட்சிக்கு எதிராக இருப்பவர்களிடம் சொல்லப்பட்டு விடுகிறதாம். எனவேதான், தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுகேட்கும் கருவி ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா? என தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் ஆய்வு நடத்திய பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, மீண்டும் இன்று காலை, தனியார் துப்பறியும் ஏஜென்சி தைலாபுரம் தோட்டத்தில், ஒட்டுகேட்கும் கருவி குறித்து, நேரடியாக வந்து ஆய்வு செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கமிஷனர் ஆபீசில் புகார்
இதுகுறித்து பாமக வட்டாரத்தில் சொல்லும்போது, "ஒட்டு கேட்கும் கருவி எங்கிருந்து வாங்கப்பட்டது? யார் மூலம் வாங்கி தைலாபுரம் தோட்டத்தில் பொருத்தப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பது யார்? என்றும், , தனியார் துப்பறியும் ஏஜென்சி கண்டுபிடிக்க போகிறதாம். அனைத்து விவரங்களையும் கண்டறிந்து முடித்ததுமே, ராமதாசிடம் முறைப்படி தகவல் அளிக்கும்.
இதன் அடிப்படையில் சென்னையிலுள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில், முறையாக தைலாபுரம் தோட்டம் சார்பில் புகார் கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
டிஜிபியிடம் புகார்
இந்த நிலையில், அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து எனது சமூக வலைதள கணக்குகளை மீட்டு தர கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை தந்துள்ளார்
அதில், எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர். சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன. அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications