டிஐஜி மீதே அட்டாக்! 53 போலீசுக்கு காயம்.. பொறுமை இழக்காத காவல்துறை! கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது?
கடலூர்: நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தில் போலீசார் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ஆனாலும் நேற்று நடந்த கலவரத்தில் மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் எதையும் போலீசார் நடத்தவில்லை.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையாக தமிழ்நாட்டில் உருவெடுத்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.
இந்த மாணவியின் மரணம் தற்கொலை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மரணத்திற்கு பின் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று மாணவியின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கலவரம்
இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று மிகப்பெரிய அளவில் கலவரங்கள் நடத்தப்பட்டன. கள்ளக்குறிச்சி பள்ளி வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. அங்கு பள்ளி பேருந்துகள் பல தீ வைக்கப்பட்டன. கட்டிடங்கள் பல தீ வைக்கப்பட்டன. உள்ளே இருந்த மேசை தொடங்கி பல பொருட்களை கலவரக்காரர்கள் எடுத்து சென்றனர். மொத்தமாக பள்ளி சூறையாடப்பட்டது.

சூறையாடப்பட்டது
அதோடு டிராக்டர் எல்லாம் கொண்டு வந்து அங்கிருந்த பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு மட்டுமின்றி நேற்று இந்தியா முழுக்க இந்த கலவரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. நேற்று நடந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களும் துரத்தியடிக்கப்பட்டன. பள்ளி மாணவி மரணத்துக்கு காரணமானோரை தண்டிக்ககோரி ஆயிரக்கணக்கான மக்கள் களமிறங்கி போராட்டம் செய்து வருகிறார்கள்.

தீ வைப்பு
அதேபோல் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டிஐஜி பாண்டியன் உட்பட பலரும் காயம் அடைந்தனர். மொத்தம் 53 போலீசார் மொத்தமாக காயம் அடைந்தனர். இதில் பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் நேற்று நடந்த கலவரத்தில் மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் எதையும் போலீசார் நடத்தவில்லை. போலீஸ் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டாலும், போலீசார் அதிகபட்சம் தடியடி மட்டுமே நடத்தினர்.

துப்பாக்கி
துப்பாக்கி இருந்தும் அவர்கள் வானத்தை நோக்கி மட்டுமே சுட்டனர். தூத்துக்குடியில் நடந்தது போல மக்களை நோக்கி நேற்று போலீசார் சுடாமல் கண்ணியம் காத்தனர். நேற்று நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு காயம் ஏற்படவில்லை. போராட்டம் முடிந்த 6 மணி நேரம் கழித்து கலவரக்காரர்கள் ஒவ்வொவருவராக கைது செய்யப்பட்டனர். இதுவரை 330 கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Recommended Video

கைது
வீடியோ ஆதாரங்கள், நேரில் பார்த்த ஆதாரங்கள், பைக்குகளில் இருக்கும் நம்பர் பிளேட் ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் ஒவ்வொருவரையும் கைது செய்தனர். இது பற்றி பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, . டிஐஜிக்கு அடிபட்ட போது கூட காவல்துறையினர் பெரிய ரியாக்சன் கொடுக்காமல், உயிர் சேதம் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். மக்களை மோசமாக தாக்காமல் பார்த்துக்கொண்டனர். அதை பாராட்ட வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications