Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் ஷோ பார்த்து விட்டு கணவருடன் வந்த கர்ப்பிணி.. காட்டு பகுதியில்.. நாசம் செய்த 4 பேர்!

கர்ப்பிணியை பலாத்காரம் செய்த 4 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நைட் ஷோ பார்த்துவிட்டு கணவனுடன் வந்து கொண்டிருந்த 5 மாத கர்ப்பிணியை 4 பேர் காரில் கடத்தி சென்றுள்ளனர்.. காட்டு பகுதியில் கர்ப்பிணியை 4 பேருமே மாறி மாறி நாசம் செய்துள்ளனர்.

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் கணவனுடன் வசித்து வருகிறார் 21 வயது இளம்பெண்.. இவர்களுக்கு கல்யாணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இப்போது இந்த பெண் திரும்பவும் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

pregnant lady raped and four arrested near cuddalore

சம்பவத்தன்று கணவனும், மனைவியும் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு நைட் ஷோ சென்றுள்ளனர்.. படம் முடிந்து 2 பேரும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கார் வந்து தம்பதியை வழிமறித்து நின்றது.

காரில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவனை சரமாரியாக தாக்கியது.. கர்ப்பிணியை இழுத்து காருக்குள் போட்டு, கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதியை நோக்கி பறந்தது.. அந்த காட்டில் 4 பேரும் கர்ப்பிணியை மாறி மாறி சீரழித்துள்ளனர். திரும்பவும் அந்த பெண்ணை காரிலேயே கொண்டு வந்து வீட்டு பக்கத்தில் விட்டு விட்டு சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட புதுநகர் ஸ்டேஷனில் புகார் தரவும் விசாரணை ஆரம்பமானது.

சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன் ஆகிய 4 பேர்தான் பெண்ணை வன்கொடுமை செய்தவர்கள். இவர்கள் 4 பேரையும் இந்த பெண் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. அதனால், இவர், செருப்பை கழட்டி அவர்களிடம் காட்டி மிரட்டி இருக்கிறார். இந்த ஆத்திரத்தில்தான், 4 பேரும் பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இப்போது 4 பேருமே கைதாகி உள்ளனர். ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. கணவனை தாக்கிவிட்டு, கர்ப்பிணியை காட்டுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+