தொடர்ந்து 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காதா? ரேஷன் கடை ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
கடலூர்: குறைந்த எடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவை அமல்படுத்தக்கூடிய நிர்வாகத்தை கண்டிப்பது, சரியான எடையில் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 22, 23 மற்றும் 24-ந் தேதிகளில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்படுகிறது. ரேஷன் கடைகளை பொறுத்தவரை ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 என்ற எண்ணிக்கையில் உள்ளன. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கின்றன.

அதேநேரம் தமிழ்நாட்டில் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆக இயங்கி வருகின்றன. இந்த 34,790 ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் தில்லுமுல்லுகளை தவிர்ப்பதற்காக பொருட்களை வாங்குவோரிடம் கைரேகைகள் வாங்கப்படுகிறது. அதற்காக ரேஷன் அட்டைகளுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ரேஷன் அட்டையின் உறுப்பினர்கள் நேரில் வந்து தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நடைமுறை இருக்கிறது.
இதற்காக 'பாயிண்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக ரேஷன் கடைகள் தற்போது முன்பைவிட வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. அதேநேரம் சில சிக்கல்களையும் இதில் ரேஷன் கடைஊழியர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும்போது கைரேகை வைத்து வழங்குவது தான் தமிழ்நாட்டில் தற்போது வழக்கமாக இருக்கிது.
இதுநாள் வரையில் தமிழக ரேஷன் கடைகளில் 40 சதவீதம் கைரேகை பொருந்தினாலே பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது 90 சதவீதம் கைரேகை பொருந்தினால் தான் ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை புகுத்தியுள்ளார்கள். 20 சதவீதம் கைரேகை பொருந்தினாலே தவறுகள் ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்ற விஞ்ஞானபூர்வமான சூழ்நிலை இருக்கிறது. அப்படியான சூழலில் 90 சதவீத கைரேகை நிபந்தனை ஏற்கத்தக்கது கிடையாது.
ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வருகிற போது அந்த கிடங்குகளில் இருக்கக்கூடிய எடை தராசும், கம்ப்யூட்டரும் 'புளூடூத்' மூலமாக இணைக்கப்படாமல் குறைந்த எடையிலேயே கடைகளுக்கு பொருட்கள் வருகின்றன. எனவே குறைந்த எடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவை அமல்படுத்தக்கூடிய நிர்வாகத்தை கண்டிப்பது, சரியான எடையில் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 22, 23 மற்றும் 24-ந் தேதிகளில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது" என்று கூறினார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications