ரவுடி கோழி பாண்டியன்.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் ரவுடி கோழி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சிதம்பரம்: பிரபல ரவுடி கோழி பாண்டியனை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் சாய்த்து வீழ்த்தியது ஒரு மர்ம கும்பல். இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் கோழி பாண்டியன். 40 வயதான இவர் ஒரு பிரபலமான ரவுடி. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலை நகர் ராஜா முத்தையா ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் கோழி பாண்டியன் தனது நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் திடீரென மர்ம கும்பல் ஒன்று வந்து, சாப்பிட்டு கொண்டிருந்த கோழி பாண்டியன் மீது குறி பார்த்து நாட்டு வெடிகுண்டை வீசியது. இது வெடித்து சிதறியதுமே அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போதும் ஆத்திரம் தீராமல், அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

ரத்தவெள்ளத்தில் கோழி பாண்டியன் உயிரிழந்தார். தகவலறிந்து கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ், உள்ளிட்ட போலீசார் நேரடியாக விரைந்து வந்துவிட்டனர். இறந்து போன கோழி பாண்டியனின் உடலைக் கைப்பற்றியதுடன், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் வெடிக்காத குண்டுகளை சம்பவ இடத்திலும் கைப்பற்றினர். இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications