கடலூர் அருகே பரபரப்பு:பழ வியாபாரியை கொன்று தலையை எடுத்துவந்த ரவுடி என்கவுண்ட்டர்...போலீசார் அதிரடி!
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் ரவுடி கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
Recommended Video

கடலூரில் பழக்கடை நடத்தி வந்த வீரா என்பவரை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு வந்தபோது கிருஷ்ணா சுட்டுக் கொல்லப்பட்டார்.
தங்களை தாக்கியதால் கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பழ வியாபாரியுடன் முன்பகை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியை சேர்ந்தவர் வீரா. இவர் கடலூரில் பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கும் கிருஷ்ணா என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீராவின் கிராமத்துக்கு சிலருடன் கிருஷ்ணா சென்றார்.

கொடூர கொலை
அப்போது அவர் தான் வைத்திருந்த அரிவாளால் வீராவின் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தார். மேலும், அவரின் தலையை துண்டாக எடுத்து ஒரு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

என்கவுண்ட்டர் செய்தனர்
அதன்பேரில் போலீசார் கொலையாளிகளை துரத்திச் சென்றனர். பண்ருட்டி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் போலீசார் கொலையாளிகளை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால் போலீசார் கிருஷ்ணாவை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

தலையை தேடி வருகின்றனர்
மேலும் வீராவின் தலையுடன் தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது. தங்களை தாக்கியதால் கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட கிருஷ்ணா ரவுடி என்று கூறப்படுகிறது. பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மலட்டாறில் கிருஷ்ணா உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்பகை காரணமாக கொல்லப்பட்ட வீராவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications