தமிழ் தேர்வில் கண்டபடி எழுதிய கடலூர் மாணவி.. ஃபுல் மார்க் போட்ட ஆசிரியர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் அருகே பள்ளியில் நடந்த பருவத்தேர்வில் தமிழ் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வேறு ஒரு விஷயத்தை எழுதியிருந்த மாணவிக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவி என்ன எழுதியிருக்கிறார் என்று கூட பார்க்காமல் மதிப்பெண் கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

90-ஸ்களில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர், தேர்வின் போது படித்த கேள்வி வரவில்லை என்றால், எதையாவது எழுதி பக்கத்தை நிரப்பிக்கொண்டு வருவார்கள். 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுபவர்கள் கூட அவ்வளவு பக்கம் எழுத மாட்டார்கள்.

teacher-awards-marks-without-checking-answer-sheet-in-cuddalore-school-parents-demand-action

ஆனால், ஒரு கேள்விக்கும் விடை தெரியாத சிலர் தான் இப்படி பக்கம் பக்கமாக எழுதுவார்கள். விடை எதுவும் சரியாக இருக்காது. சினிமா பாடல்கள், பக்கத்து வீட்டு கதை என எதையாவது எழுதி வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இதனை கிளாஸ் ரூம்களில் வைத்து ஆசிரியர் படித்து காண்பித்து, அந்த மாணவருக்கு கேள்வி பதிலை 10 முறை எழுதி வா என தண்டனை வழங்கியிருப்பதை பார்க்க முடியும்.

இது போல் ஒரு சம்பவம் தான் கடலூர் அருகே நடந்துள்ளது. தமிழ் பருவத் தேர்வு நடந்தது. இதில் கேள்விகளுக்கு சம்பந்தேமே இல்லாமல் பதில் அளித்த மாணவிக்கு ஆசிரியர் மதிப்பெண் போட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடி என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 500 மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த பள்ளியில் பருவத்தேர்வு நடந்துள்ளது. இதில் தேர்வு முடிந்து, திருத்தப்பட்ட விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு ஆசிரியர் நல்ல மதிப்பெண் வழங்கியிருந்தார்.

ஆனால் அந்த மாணவி தன்னுடைய விடைத்தாளில் வினாக்களுக்கு உரிய விடையை எழுதாமல், தனது சொந்த கருத்துகளை எழுதியிருந்தார். இதற்கு அந்த ஆசிரியரும் மதிப்பெண் வழங்கியிருந்தார். 'மக்கள் விலங்குகள் போல வாழ காரணம் என்ன' என்ற கேள்விக்கு, அந்த மாணவி, "ஆசிரியர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு ஒரு பெண்ணை கெடுத்து விட்டான்.. அவனை வேலையை விட்டு தூக்குங்க, இப்படிக்கு உங்கள் மாணவி" என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

சக மாணவர்கள் அந்த மாணவியின் விடைத்தாளை பார்த்தபோது, இந்த தவறான பதிலுக்கு ஆசிரியர் மதிப்பெண் போட்டிருந்ததை பார்த்துவிட்டனர். இதை ஆசிரியரிடம் சொன்னபோது, மதிப்பெண்ணை மட்டும் அடித்துவிட்டு விடைத்தாளை வாங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தெரியவர, மாணவர்கள் எழுதும் விடைகள் சரியாக இருக்கிறதா என பார்க்காமல் திருத்தம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே மாணவி விடைத்தாளில் குறிப்பிட்டு இருந்த ஒரு ஆசிரியர் தற்காலிகமாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் கூறுகையில், "மாணவி எழுதிய விடைத்தாளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆசிரியர் மீது தவறு இருப்பது உறுதியானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+